உச்சி முதல் பாதம் வரை உள்ள நோய்களை குணப்படுத்தும் 8 வடிவ பயிற்சி:! அவசியம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

0
153

உச்சி முதல் பாதம் வரை உள்ள நோய்களை குணப்படுத்தும் 8 வடிவ பயிற்சி:! அவசியம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

எட்டு போடுறவனுக்கு நோய் எட்டிப் போகும் என்னும் பழமொழிக்கு ஏற்ப நம் தமிழ் சித்தர்களால் கண்டுபிடிக்கப்பட்ட எட்டு வடிவ நடை பயிற்சி இன்று தமிழர்களால் மறக்கப்பட்டு மேலைநாட்டு வரை சென்று தற்போது மீண்டும் “இன்ஃபினிட்டி வாக்கிங்” என்ற பெயரில் நம்மிடமே வந்துள்ளது.நம் அனைவராலும் மறக்கப்பட்ட இந்த எட்டு வடிவ பயிற்சியின் நன்மைகளைப் பற்றியும் அதனை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பதனை பற்றியும் இந்த பதிவில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம் வாங்க!

எட்டு வடிவம் வரைவது எப்படி?

ஒரு அறை அல்லது வெட்டவெளியில்,கிழக்கு மேற்காக ஒரு கோடை வரைந்து கொள்ளுங்கள்.மீண்டும் 12 அடி இடைவெளி விட்டுவிட்டு மீண்டும் வடக்கு மேற்காக ஒரு கோடு வரையுங்கள்.
பின்பு தெற்கு வடக்கு நோக்கி எட்டை வரையுங்கள்.

எட்டு நடைபயிற்சியை எங்கு செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும்?

முதலில் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி 15 நிமிடங்கள் நடக்க வேண்டும்.பின்பு தெற்கிலிருந்து வடக்கு நோக்கி எட்டு வடிவில் 15 நிமிடம் நடைப்பயிற்சி செய்யவேண்டும்.

இந்த பயிற்சியை மண் தரை காரை,தார்ரோடு என அனைத்து பகுதியிலும் காலில் செருப்பு அணியாமல் உள்ளங்கால்கள் தரையில் படும்படி நடக்க வேண்டும்.இந்த பயிற்சியை மண்தரையில் செய்தால் விரைவில் நல்ல பலன்கள் கிட்டும்.

புற்று நோய் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களை தவிர,இந்த பயிற்சியினை 18 வயதிற்கு மேல் உடைய அனைவர்களும் செய்யலாம்.

நடக்கும் பொழுது நன்றாக கைகளை வீசி நடக்க வேண்டும்.

இந்த நடைபயிற்சியை காலை மாலை என இரண்டு வேளைகளிலும் சாப்பிடுவதற்கு முன்பு 30 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும்.

இந்த பயிற்சி செய்வதால் உடலில் ஏற்படும் நன்மைகள்!

நாம் எட்டு வடிவில் நடக்கும் பொழுது பாதத்தின் மையத்தில் ஏற்படும் அழுத்தம் காரணமாக உள்ளுறுப்புகளின் செயல்கள் தூண்டப்படும்.

இதன் காரணமாக,செரிமான பிரச்சினைகள்,தைராய்டு பிரச்சனை,உடல் பருமன் மலச்சிக்கல்,முழங்கால் வலி உடல் வலி,தோள்பட்டை வலி ,இடுப்பு வலி,கால்பாத வெடிப்பு,கீழ்வாதம்,சைனஸ் பிரச்சனை ஆஸ்துமா பிரச்சனை,உள்ளிட்ட பல்வேறு கொடிய நோய்களுக்கு இந்த எட்டு வடிவ பயிற்சி ஒரு நல்ல தீர்வாக அமையும்.

இது மட்டுமின்றி உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைத்து,இதய பிரச்சனையில் இருந்தும் நம்மை மீட்டெடுக்கும்.

மேலும் இந்த எட்டு வடிவ பயிற்சியை மேற்கொள்வதால் மன அழுத்தத்தில் இருந்தும் நாம் மீண்டெழலாம்.

சைனஸ் மற்றும் ஆஸ்துமா பிரச்சனையால் மூச்சுவிட சிரமப்படுபவர்கள் இந்த பயிற்சியை செய்து வந்தால்,இந்த பிரச்சனை விரைவில் குணமாகும்.

இந்த பயிற்சியை மேற்கொள்வதனால் ரத்தம் ஓட்டம் சீராகி,ரத்தத்தின் இன்சுலின் அளவை சீர்படுத்தி ஒரே வருடத்தில் சர்க்கரை நோய் உள்ளவர்களை முற்றிலும் குணப்படுத்தும் சக்தி இந்த 8வடிவ பயிற்சிக்கு உண்டு.

தினமும் உங்கள் பொன்னான நேரத்தில் ஒரு 30 நிமிடத்தை ஒதுக்கி இந்த நடைப்பயிற்சியை மேற்கொண்டால்,நம் உடலை பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாத்து நீண்ட ஆயுளைப் பெறலாம்.

 

 

author avatar
Pavithra