விவசாய நிலத்தில் கிடந்த பிளாஸ்டிக் டப்பா வெடித்து துண்டான பெண்ணின் விரல்கள்!

Photo of author

By Parthipan K

விவசாய நிலத்தில் கிடந்த பிளாஸ்டிக் டப்பாவை எடுத்ததனால் அதனுள் இருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து பெண்ணின் கை விரல்கள் துண்டானது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே இலட்சுமி அம்மாள் புரம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரா (வயது 40). இவர் விவசாய நிலத்தில் மாடுகளை மேய்த்துவிட்டு வீட்டிற்கு செல்ல கயிற்றை அவிழ்க்க சென்றுள்ளார். அப்போது அதன் அருகில் ஒரு பிளாஸ்டிக் டப்பா கிடந்துள்ளது. அது என்னவென்று பார்பதற்காக சந்திரா அதனை கையில் எடுத்த போது, அதில் இருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறியது. அதில் சந்திராவின் இடது கையில் இரண்டு விரல்கள் துண்டானது. சந்திராவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அது வனவிலங்குகளுக்கு வைக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டு என சந்திராவின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.