வெடிகுண்டு சோதனையால் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் பரபரப்பு!

0
124

வெடிகுண்டு சோதனையால் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் பரபரப்பு:!

வெடிகுண்டு விற்பதற்காக தீவிரவாதிகள் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் சுற்றி வருவதாக,ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் வந்ததனடிப்படையில்,
திண்டுக்கல் ரயில்வே நிலையத்தில் வெடிகுண்டு சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டதால்,அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்ட ரயில் நிலையத்தின் பின்பகுதியில் குட்செட் அருகே ரயில் பாதுகாப்பு படை காவல் நிலையம் உள்ளது.அங்குள்ள காவலர்களுக்கு கடந்த செப்டம்பர் எட்டாம் தேதி,தீபாவளி என்ற தீவிரவாதி திண்டுக்கல் ரயில் நிலையத்தில் சுற்றி வருவதாகவும்,அவன் வெடிகுண்டு தயாரித்து விற்பனை செய்வதாகவும் ஒரு கடிதம் வந்தது.

இந்த கடிதத்தின் அடிப்படையில்,ரயில்வே பாதுகாப்பு துறையினர் வெடிகுண்டு தடுப்பு பிரிவினருக்கு தகவல் அளித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெடிகுண்டு தடுப்பு காவல் துறையினர்,ரயில் நிலையம் முழுவதும் மோப்ப நாய்கள் மூலமும்,மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலமும்,கடந்த எட்டாம் தேதி இரவு முதல் நேற்று முன்தினம் வரை சோதனை நடத்தப்பட்டது.ரயில் நிலையத்தின் உள்ளேயும், வெளியேயும்,ரயில் பாலங்கள்,சரக்கு ரயில் இன்ஜின்,குட்செட்,நடைமேடை என அனைத்து பகுதிகளிலும் காவல் துறையினர் ஆய்வு செய்தனர்.ஆனால் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது எந்தவிதமான தடயமும் கிடைக்கவில்லை.

அதன்பின்பே கடிதத்தில் குறிப்பிட்ட தகவல் பொய்யானது என்பது தெரியவந்தது.இதனையடுத்து கடிதத்தை எழுதியது யார்? எங்கிருந்து இந்த கடிதம் வந்துள்ளது? என்பதனை பற்றி ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை செய்து வருகின்றனர்.இருந்த பொழுதிலும் முன்னெச்சரிக்கையாக நேற்று ரயில்வே ஸ்டேஷனில் பாதுகாப்புக்காக காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.பயணிகளின் உடமைகளை தரவாக பரிசோதித்த பின்னரே பயணிகள் ரயில் நிலையத்திற்குள் அனுப்பினர்.இச்சம்பவத்தால் மூன்று நாட்களாக திண்டுக்கல் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Previous articleபத்திரிகையாளர்களுக்கு தண்டனை விதித்த துருக்கி நாடு
Next articleஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 20% இடம் அதிகரிப்பு!