பத்திரிகையாளர்களுக்கு தண்டனை விதித்த துருக்கி நாடு

0
184

துருக்கியில் பேரிஸ் டெர்கோக்லு, ஹூல்யா கிலிங்க், எரன் எகின்சி, பேரிஸ் பெஹ்லிவன், பெர்ஹட் செலிக், அய்தின் கெசர், எரிக் அகாரர், முரார் அகிரல் ஆகிய 8 பத்திரிகையாளர்கள் மீது  அரசின் ரகசியத்தை வெளியிட்டு விட்டதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. விசாரணைக்கு பின்னர் பேரிஸ் டெர்கோக்லு, எரன் எகின்சி ஆகியோர் குற்றமற்றவர்கள் என கூறி கோர்ட்டு விடுதலை செய்து விட்டது.

அதே நேரத்தில், பேரிஸ் பெஹ்லிவன் மற்றும் ஹூல்யா கிலிங்க் ஆகிய இருவருக்கும் தலா 45 மாதங்கள் சிறைத்தண்டனையும், முரார் அகிரல், பெர்ஹட் செலிக் மற்றும் அய்தின் கெசர் ஆகிய 3 பேருக்கு தலா 56 மாதங்கள் சிறைத்தண்டனையும் விதித்து நேற்று முன்தினம் தீர்ப்பு அளிக்கப்பட்டது. எரிக் அகாரர் மீதான வழக்கு தனியாக பிரிக்கப்பட்டுள்ளது.

Previous articleதிடீர்னு சாமி மேல இவ்வளவு அக்கறையா? அண்டர் பல்டி அடித்த வனிதா!
Next articleவெடிகுண்டு சோதனையால் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் பரபரப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here