எலும்புகளை வலிமையாக்கும் கேழ்வரகு உப்பு உருண்டை!! செய்வது எப்படி?

0
40

எலும்புகளை வலிமையாக்கும் கேழ்வரகு உப்பு உருண்டை!! செய்வது எப்படி?

கேழ்வரகில் பல மருத்துவ குணம் உள்ளது. கேழ்வரகை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும். பல நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும். உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும். உடல் எலும்புக்குத் தேவையான வலுவை சேர்க்கும். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் கேழ்வரகை நன்றாக சாப்பிட்டு வரலாம். அரிசி சாதத்துக்குப் பதிலாக கேழ்வரகு கூழை குடித்து வரலாம்.

இவ்வளவு நன்மை கொண்ட கேழ்வரகில் உப்பு உருண்டை செய்வது எப்படி என்று பார்ப்போம் –

தேவையான பொருட்கள் :

கேழ்வரகு – 200 கிராம்,

உப்பு – தேவைக்கேற்ப

பெருங்காயம் – ஒரு டீஸ்பூன்,

கடுகு – அரை டீஸ்பூன்,

வெங்காயம் – 4,

பச்சை மிளகாய் – 4,

கறிவேப்பிலை – சிறிதளவு,

எண்ணெய் – 4 டீஸ்பூன்.

செய்முறை :

முதலில் வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகி, கறிவேப்பிலை, பச்சை மிளாய் போட்டு வதக்கி இறக்க வேண்டும். இறக்கியபோது பெங்காயத்தூளை சேர்க்க வேண்டும்.

கேழ்வரகு மாவில் சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து உதிரிபோல் ஆவியிட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

வேகவைத்த கேழ்வரகுமாவில் வதக்கி வைத்த கலவையை போட்டு நன்றாக கிளறி உருண்டைகளாக பிடிக்க வேண்டும். பின்னர் அந்த உருண்டைகளை இட்லி பாத்திரத்தில் வைத்து 15 நிமிடங்கள் வேக வைத்து எடுக்க வேண்டும்.

சுவையான கேழ்வரகு உப்பு உருண்டை ரெடி.

author avatar
Gayathri