பூஸ்டர் டோஸ் தடுப்பூசியின் ஆய்வு முடிவுகள் வெளியீடு! இது ஒமிக்ரானை தடுக்குமா?
கொரோனா தொற்றானது உலகம் முழுவதும் பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த நிலையில் அதனை கட்டுப்படுத்த தீவிர கட்டுப்பாடுகள் விதித்து உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி செலுத்தும் பணியை செயல்படுத்தி வருகின்றன. அதன் காரணமாக கொரோனா தொற்றானது உலகம் முழுவதும் ஓரளவு கட்டுக்குள் வந்தது.
இதனை தொடர்ந்து உலகம் முழுவதும் கொரோனா தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்ததை அடுத்து மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருந்தனர். இந்த நிலையில் கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வைரஸ் கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்பு தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் கண்டறியப்பட்ட ஒரு மாதத்திலேயே சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியது.
இதன் காரணமாக உலகம் முழுவதும் இந்த ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியது. இந்நிலையில் உலகம் முழுவதும் குறைந்து வந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் தங்களை தொற்றிலிருந்து மேலும் தற்காத்துக் கொள்ளும் வகையில் உலகம் முழுவதும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசிகளை பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளாக அளிப்பதன் மூலம் எந்த அளவு தடுப்பாற்றல் அதிகரிக்கிறது என்பது குறித்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அஸ்ட்ராஜெனேகா வகை தடுப்பூசிகளை பூஸ்டர் டோஸாக அளிப்பதன் மூலம் அது ஒமிக்ரான், டெல்டா, ஆல்பா, பீட்டா மற்றும் காமா உள்ளிட்ட உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு எதிரான ஆன்டிபாடிகளை உருவாக்குவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், முதல் இரண்டு டோஸ் தடுப்பூசிகள் எந்த கால இடைவெளியில் அளித்திருந்தாலும், மூன்றாவதாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக கோவிஷீல்டை செலுத்தி கொள்வதன் மூலம் அவர்கள் தடுப்பாற்றல் அதிகரிப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.