இரு கட்சிகளும் பார்க்க போகிறது பலப்பரீட்சை..இதில் நான் போய் என்ன செய்யபோகிறேன் புது சிகிச்சை! பஞ் டைலாக் பேசிய டி.ராஜேந்திரன்!
தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இரு கட்சிகளும் தன் கூட்டணி கட்சிகளுடன் வாக்கு சேகரிப்பதில் ஆர்வமாக உள்ளனர்.இதனையடுத்து பல நடிகர் நடிகைகள் அரசியலில் இறங்கி உள்ளனர்.அவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபடுவதால் தேர்தல் களமானது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.பல தனியார் ஊடகங்கள் கருத்து கணிப்புகளையும் எடுத்து இரு கட்சிகளையும் பீதியடைய செயகின்றனர்.
அந்தவகையில் இயக்குனர் மற்றும் நடிகருமான டி.ராஜேந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பது,மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதா அம்மா இல்லாமல் அதிமுக சந்திக்கக்கூடிய முதல் சட்டமன்ற தேர்தல்களம்.அதே போல மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி இல்லாமல் திமுக சந்திக்கக்கூடிய முதல் சட்டமன்ற தேர்தல்களம் என்று முதலில் பேச்சை சாதரணமா ஆரம்பித்தார்.
அதன்பின் அவர் தன் சினிமா பட பாணியில் பேசிய வாடா என் மச்சி,வாழக்க பஜ்ஜி,உன் உடம்ப பிச்சு,போட போறேன் பஜ்ஜி என பேசியது போல எதுகை முனை போட்டு பேச ஆரம்பித்துவிட்டார்.அவ்வாறு அவர் பேசியது,இரண்டு கட்சிகளுமே அவரவருக்கு இருக்கிறது பலம்,இது தவிர சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள் பக்கபலம்.அது தவிர அவர்களிடம் இருக்கிறது பக்க பலம்.
இரண்டு கட்சிகளுமே பார்க்க போகிறது பல பரீட்ச்சை,இதில் நான் போய் என்ன செய்ய போகிறேன் புது சிகிச்சை.ஒவ்வொருவருடைய வார்த்தையில் இருக்கக்கூடிய வாக்கு வன்மை,வார்த்தையில் இருக்கும் தன்மை,அதில் வெளிபடுத்தும் உண்மை அதற்கென்று ஒரு சக்தி இருக்கிறது என்று முன்னால் முதல்வர்கள் நம்பினார்கள்.அதன் அடிப்படையில் தன்னை பிரச்சாரத்திற்கு அழைத்தார்கள்.அது ஒரு காலக்கட்டம் என நியாபகம் வருதே நியாபகம் வருதே என்பதை போல் நினைத்து கூறினார்.அதன் பின் கொள்கையை எடுத்துச் சொல்லி வாக்கு கேட்டதெல்லாம் அந்த காலம்,ஆனால் கொடுக்க வேண்டியதை கொடுத்துவிட்டு வாக்கு கேட்பது இந்த காலம் என்றார்.
காலமும் சரியில்லை,களமும் சரியில்லை,அதனால் நான் கரையில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கலாம் என்று முடிவு எடுத்துவிட்டேன் என்றார்.மேலும் அவர் கூறியது,பத்தாதிற்கு இது கொரோனா காலம்.அதனால் பாதுகாப்பாக இருக்க அணிய வேண்டும் முகமூடி,அதேபோல பக்குவபட்டவனாக இருக்கு வேண்டுமென்றால் அமைதி காக்க வேண்டும் வாய்மூடி என பார்ப்பவர்களை ஆச்சரியம் படுத்தும் விதத்தில் எதுகை முனையாக பேசினார்.இந்த சட்டமன்ற தேர்தலில் லட்சிய திமுக யாரையும் ஆதரிக்கவுமில்லை,அரவணைக்கவும் இல்லை என்றார்.
நாங்கள் நடுநிலமையாக இருக்க விரும்புகிறோம் என்றார்.நாடும் நாட்டு மக்கள் நலமுடம் இருக்க இறைவனிடம் பிராத்திக்கிறோம் என்று தெரிவித்து உரையை முடித்தார்.இவர் பேசிய போது தற்போது கூறும் அறிக்கைகளுக்கெல்லாம் மதிப்பில்லை பணத்திற்கு தான் என சார்வசாதாரணமாக எதுகை முனையாக கூறிவிட்டார்.பிறகு களமும் சரியில்லை என ஒட்டு மொத்த அரசியலையும் கூறி ஒதுங்கி இருப்பதாகவும் உரைத்தார்.இவர் பேசிய இந்த உரை அதிக அளவு வைரலாகி வருகிறது.