பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கும் மாவீரன்!! இதுவரை எவ்வளவு கோடி தெரியுமா??

0
219
Box office smasher!! Do you know how many crores so far??
Box office smasher!! Do you know how many crores so far??

பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கும் மாவீரன்!! இதுவரை எவ்வளவு கோடி தெரியுமா??

சின்னதிரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்தவர் தான் நடிகர் சிவகர்த்திகேயன். இதற்காக  அவர் போட்ட உழைப்பும் அதற்கான முயற்சியும் தான் அவர் இந்த உயரத்திற்கு வர காரணம்.

பலர் அவரை கேலியும் கிண்டலும் செய்து வந்தாலும் இன்றைய தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடம் பிடித்துள்ளார். தமிழக மக்கள் அனைவராலும் நம்ம வீட்டு பிள்ளை என்று ரசிகர்கள் அனைவரும் இவரை கொண்டாடி வருகின்றனர்.

தற்பொழுது சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்பொழுது வெளியாகி உள்ள படம் மாவீரன்.இந்த படத்தை மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தில் அதிதி ஷங்கர் ,மிஸ்கின் ,யோகிபாபு ,சரிதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.தற்பொழுது படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அந்த படத்தில் விஜய் சேதுபதியின் குரல் இந்த படத்திற்கு வலு சேர்த்துள்ளது.இப்படி பல பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று ரசிகரர்களா கொண்டாடப்பட்டு வருகின்றது.

படும் தோல்விக்கு பிறகு கம் பேக் கொடுக்கும் விதமாக இந்த படம் சிவகார்த்திகேயனுக்கு அமைந்துள்ளது.தற்பொழுது வெளியாகி முதல் நாள் மட்டும் சுமார் 7.61 கோடி வசூல் செய்தது . இரண்டாம் நாள் வசூல் 9.37 கோடி என்று அளவிற்கு வசூல் செய்தது.

அதன்பின்பு படம் வெளியாகி தற்பொழுது 5 வது நாளாக சுமார் ரூ.55 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.தற்பொழுது படம் வெளியாகி 11 நாட்கள் ஆகியும் இதன் வசூல் குறையவில்லை.அந்த வகையில் இதுவரை சுமார் ரூ. 75  கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சிவர்கர்த்திகேயனின் சினிமா வாழ்வில் அதிக வசூலை பெற்ற முதல் படம் இது தான் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Previous articleவிவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்!! இலவச மின் இணைப்பு வசதி!!
Next articleகொஞ்சம் கொஞ்சமாய் ஹீரோவாக மாற நினைக்கும் தோனி!! முதல் படத்திற்கே இவ்வளவு பேராசையா??