குண்டு வெடித்ததில் சிறுவன் பலி! துப்பாக்கி வைத்து செல்ஃபி எடுத்து விளையாடிய சிறுவனுக்கு நேர்ந்த சம்பவம் !!

0
190

குண்டு வெடித்ததில் சிறுவன் பலி! துப்பாக்கி வைத்து செல்ஃபி எடுத்து விளையாடிய சிறுவனுக்கு நேர்ந்த சம்பவம் !!

பீகார் மாநிலத்தில் துப்பாக்கியை வைத்து செல்பி எடுக்க முயன்ற சிறுவன், குண்டு வெடித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் கோபாலகாஞ்ச் மாவட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துவிட்டு, பொரியியல் படிப்பிற்கான நுழைவுத் தேர்வினை எழுதி காத்திருக்கும் 17 வயது சிறுவனுக்கு நேர்ந்துள்ளது.

உறவினர்கள் ஒருவரின் துப்பாக்கி கிடைத்தயடுத்து, அதை வைத்து போஸ் கொடுப்பது போல செல்பி எடுக்க முயன்ற சிறுவன் திடீரென ட்ரிக்கரை தவறுதலாக கை பட்டதால், துப்பாக்கியில் இருந்து வெளிவந்த தோட்டா சிறுவனின் உடலில் பாய்ந்தது. இதனால் அச்சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும் ,இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleதங்க சுரங்கத்தில் நிலச்சரிவு : 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பலி !
Next articleராமேஸ்வரம் கடற்பகுதி அரிய வகை கடல்வாழ் உயிரினங்களை காக்க உருவாக்கப்படும் செயற்கை பவளப்பாறைகள் !!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here