இக்காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மொபைல் பயன்பாட்டில் மூழ்கிக் கிடக்கின்றனர்.மொபைல் போனில் தங்கள் பொன்னான நேரங்களை வீணடிக்கும் பழக்கம் இன்றைய தலைமுறையினரிடையே அதிகரித்து வருகிறது.
இன்று பலர் தூங்கி எழுந்ததில் இருந்து இரவு தூங்கும் வரை போனுடன் வாழ்க்கையை கழிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.மொபைல் போன் நமது வேலைகளை எளிமையாக்கி இருந்தாலும் அதனால் அடிமையமாகி சமூக வலைத்தளங்களில் மூழ்கி கிடக்கும் இளம் தலைமுறையினரின் எதிர்கால வாழ்க்கை கேள்விக் குறியாகி வருகிறது.
நீண்ட நேரம் மொபைல் பயன்படுத்தினால் அதில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு மூளையை தாக்கி புற்றுநோய் கட்டிகளாக மாறக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.மொபைல் போனில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு அதிர்வெண் மின்காந்த ஆற்றல் புற்றுநோயை உண்டாக்க கூடியவை.மொபைல் பயன்படுத்துபவர்கள் அதற்கு அடிமையானால் மன அழுத்தம்,உடல் சோர்வு,கவலை உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது நிருபிக்கப்பட்ட உண்மை.
மூளையின் செயல்பாட்டை சீர்குலைத்து புற்றுநோய் கட்டிகளை உருவாக்கி விடும்.மொபைல் போனை மிதமாக பயன்படுத்துபவர்களுக்கு பாதிப்பு இல்லை.10 வருடங்களுக்கு மேலாக அதிக நேரம் போன் பயன்படுத்துபவர்களுக்கு மூளை புற்றுநோய் ஏற்பட வாய்ப்பிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.காதில் வைத்தபடி அதிக நேரம் போன் பேசுவதால் செவித்திறன் பாதிக்கப்படுவதோடு கதிவீச்சுகள் நேரடியாக மூளைக்கு சென்று ஆபத்தை ஏற்படுத்தும்.
எனவே போனை நேரடியாக பயன்படுத்துவதை விட இயர்போன்,ஹெட் செட் பயன்படுத்தி மூளை புற்றுநோய் அபாயத்தை குறைக்கலாம்.அதிக நேரம் மொபைல் பயன்படுத்தும் ஆண்களின் விந்தணுக்கள் குறைந்துவிடும்.மொபைலில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சுகள் ஆண்மை குறைபாடு,கண் பார்வை குறைபாடு போன்ற பாதிப்புகளை உண்டாக்க கூடும்.எனவே அதிக’நேரம் மொபைல் போன் பயன்படுத்துவதை தவிர்த்தல் நல்லது.