மூளைச்சாவு அடைந்தவரின் கல்லீரல் எடுத்து வெளிநாட்டில் விற்பனை!!

0
299
#image_title

மூளைச்சாவு அடைந்தவரின் கல்லீரல் எடுத்து வெளிநாட்டில் விற்பனை!!

கேரளாவில் அபின் என்பவர் தனது மோட்டார் சைக்கிள் சாலையில் சென்றுக் கொண்டிருக்கும் போது மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது . மேலும்  அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில்  அவரை கொத்தமங்கலம் மார் பெஸ்லியஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில்   அவரின்  மேல் சிகிச்சைகாக  எர்ணாகுளத்தில் உள்ள லேஷோர் மருத்துவமனையில் சேர்க்கபட்டார் .

விபத்தில் சிக்கியவரை காப்பாற்றாமல் லேஷோர் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் அவருக்கு  மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக  கூறியுள்ளனர். மேலும் அவரிடமிருந்து முக்கியமான உறுப்புகள் அகற்றப்பட்டது. இந்நிலையில் அவரின்  கல்லீரல் விதியை மீறி வெளிநாட்டு நபருக்கு பொருத்தபட்டது .

இந்த செய்தியை கேள்விப்பட்ட கொல்லத்தைச் சேர்ந்த கணபதி என்ற மருத்துவர் மாஜீஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். விபத்தில் சிக்கியவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும்  அவரிடமிருந்து கல்லீரலை எடுத்து  வெளிநாட்டு நபருக்கு பொருத்தியுள்ளனர்.எனவே இது குறித்து விசாரிக்க வேண்டும் என தனது மனுவில்  கோரி இருந்தார்.

முதல் கட்ட விசாரணையில்  கணபதி கூறிய ஆதாரங்கள் அடிப்படையில் விதி மீறிய லேஷோர் மருத்துவமனையில் உள்ள  8 மருத்துவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் 1994ன் கீழ், மனித உறுப்புகள் மாற்றுச் சட்டப்படி குற்றம் செய்த மருத்துவர்கள் அனைவரும் கோர்டில் ஆஜராக சம்மன்  அனுப்பப்பட்டுள்ளது.

இரண்டு  மருத்துவமனையில் உள்ள நரம்பியல் நிபுணர்கள் கூறியதை கேட்டு மண்டை ஓட்டில்  இருந்த ரத்தத்தை அகற்றி இருந்தால் அவர் உயிரைக் காப்பாற்றி இருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆனால் ரத்தத்தை வெளியேற்றுவதற்கு முன்பே எச்.ஐ.வி  சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் மூளைச்சாவு அறிவிப்புக்கு முன்பே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது.இந்த செய்தி  கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

Previous articleபிரசவத்திற்கு சேர்க்கப்பட்ட பெண்ணிற்கு பிறந்த அதிசய குழந்தை! மருத்துவர்கள் அதிர்ச்சி! 
Next articleஅடித்த காற்றில் திடீரென பறந்து வந்த மேற்கூரை! பயத்தில் கதறிக்கொண்டு  ஓட்டம் பிடித்த பயணிகள்!!