BREAKING: இதை ஒன்னு மட்டும் செய்யுங்கள்.. ரஜினியை பேரம் பேசும் பாஜக!! அரசியல் வட்டராத்தில் தொடர் பரபரப்பு!!

0
468
BREAKING: Just do this one thing..BJP will bargain for Rajini!! Continual excitement in the political circle!!
BREAKING: Just do this one thing..BJP will bargain for Rajini!! Continual excitement in the political circle!!

BREAKING: இதை ஒன்னு மட்டும் செய்யுங்கள்.. ரஜினியை பேரம் பேசும் பாஜக!! அரசியல் வட்டராத்தில் தொடர் பரபரப்பு!!

மக்களவை தேர்தல் வருவதையொட்டி அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்தவகையில் களம் காணப்போகும் கட்சி எது என்பதிலும் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.திமுக பத்தாண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்த்திருந்தாலும் முதலில் அவர்களின் செயல்பாடுகள் மக்களை மகிழ்விக்கும் வகையில் இருந்துவிட்டு பின்பு தான் அவர்களின் சுயரூபமே தெரியவந்தது.

விலைவாசி உயர்வு,போதைபொருள் அதிகளவு ஊடுருவுவது என அடுத்தடுத்து பலவற்றை மக்கள் சந்தித்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி பெண்களை அவ்வபோது இழிவாக பேசிவிடுவது இவ்வாறன காரணங்களால் மக்கள் மத்தியில் ஆளும் கட்சி மீது ஈடுபாடு இல்லாமல் உள்ளனர்.அதேபோல அதிமுக பாஜக கூட்டணி முறிவானத்து சிலர் மத்தியில் வரவேற்கும் வகையில் இருந்தாலும் பாஜக தனது கூட்டணியை பலமாக்க வேண்டுமென்பதற்காக பல யுக்திகளை கையாண்டு வருகிறது.

பாஜக-வானது பாமக, சமத்துவ மக்கள் கட்சி என கூட்டணி வைத்து அதிமுக-வை திணற விட வேண்டும் என எண்ணி வருகிறது.அந்தவகையில் நடச்சத்திர பட்டாளங்களையும் விலைக்கு எடுத்து வருகிறது என்றே கூறலாம்.ராதிகா சரத்குமார் என தொடங்கி நகைச்சுவை நடிகை ஆர்த்தி வரை பாஜக-வில் இணைந்துள்ளனர்.இதனைதொடர்ந்து தற்பொழுது சூப்பர் ஸ்டாரையும் இந்த பட்டியலில் சேர்க்க முயற்ச்சித்து வருகின்றனர்.ரஜினிகாந்த் அவர்கள் சட்டமன்ற தேர்தலின் போதே அரசியலில் இறங்குவார் என பலரும் எதிர்பார்த்து இருந்த நிலையில் அது ஏமாற்றத்தையே கொடுத்தது.

இருப்பினும் அவ்வப்போது மோடி தலைமையில் உள்ள அரசு குறித்து பெருமை பேசுவதையே வழக்கமாக வைத்திருப்பார்.குறிப்பாக 1000 மற்றும் 500 நோட்டுக்கள் செல்லாது என அறிவிப்பு வந்தது குறித்து மிகவும் ஆதரவளித்து பேசினார்.இதுபோல மோடி அதிரடியாக எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து பேசுவதால், தற்பொழுது இவரை நட்சத்திர பட்டாளத்தில் இணைக்க முயற்சித்து வருகின்றனர்.நீங்கள் கட்சியில் சேரவில்லை என்றாலும் பராவயில்லை,பாஜக-விற்கு ஆதரவளிப்பது போல ஓர் வீடியோ மட்டும் போடுமாறு கேட்டு வருகின்றனர்.

இதுகுறித்த தகவலானது தற்பொழுது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.அவ்வாறு ரஜினி அவர்கள் வீடியோ ஒன்றை போட்டால் பாஜக விற்கு வாக்கு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறுகின்றனர்.

Previous articleஅண்ணாமலை சொன்னதை ரிப்பீட் செய்த ஸ்டாலின்! அதிமுகவுக்கு இருபக்கமும் அடி!
Next articleஇதுதான் கடைசி வாய்ப்பு.. அண்ணாமலை பதவிக்கு செக்!! வானதி சீனிவாசனுக்கு அடுத்த வாய்ப்பு!!