இதுதான் கடைசி வாய்ப்பு.. அண்ணாமலை பதவிக்கு செக்!! வானதி சீனிவாசனுக்கு அடுத்த வாய்ப்பு!!

0
611
this-is-the-last-chance-check-for-annamalai-post-vanathi-srinivasans-next-chance
this-is-the-last-chance-check-for-annamalai-post-vanathi-srinivasans-next-chance

இதுதான் கடைசி வாய்ப்பு.. அண்ணாமலை பதவிக்கு செக்!! வானதி சீனிவாசனுக்கு அடுத்த வாய்ப்பு!!

பாஜக தனது பலத்தை இந்த தேர்தலிலும் காட்டியே ஆக வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.கடந்த தேர்தலில் அதிமுக என்ற பெரிய கூட்டணி கைவசம் இருந்தது.ஆனால் இம்முறை இல்லாததால் வாக்கு சரியக்கூடுமோ என்ற பெரிய அச்சத்திலேயே பாஜக உள்ளது.பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றால் தமிழ்நாட்டில் இந்த அளவிற்கு ஊடுருவி இருக்க முடியாது.தற்பொழுது மாபெரும் கட்சியாக தமிழ்நாட்டி வளைந்து நிற்கிறது.

அந்தவகையில் இம்முறை களம் காண வேண்டுமென்பதற்காக நட்சத்திர பட்டாளம் மற்றும் இதர கட்சிகளையும் கூட்டணியில் வைத்துக்கொண்டது.அந்தவகையில் தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை அவர்கள் கோவை மாவட்ட தொகுதியில் நிற்கிறார்.அவர் மீது அதிக விமர்சனங்களை அதிமுக மற்றும் ஆளும் கட்சி வைத்தாலும் அவருக்கென்ற தனி இடம் இருக்கத்தான் செய்கிறது.

இந்த தேர்தலில் அண்ணாமலை அவர்கள் வெற்றிபெற்று விட்டால் கட்டாயம் மத்திய அரசில் ஓர் இடம் ஒதுக்கி வைத்திருப்பதாக கூறுகின்றனர்.அவ்வாறு இவர் புரோமஷன் செய்யப்படும்போது அடுத்த தமிழக பாஜக மாநில தலைவராக கட்டாயம் வானதி சீனிவாசன் நியமிக்கப்படுவார் என முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதற்கு மாறாக அண்ணாமலை வெற்றிபெறவில்லை என்றால் கட்சியில் உள்ள பதவி பறிபோக அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறுகின்றனர்.அண்ணாமலையால் தொடர்ந்து மேலிடத்திற்கு அதிக அழுத்தம் இருந்ததாகவும் தற்பொழுது தான் அதிலிருந்து விடுபட்டு இருப்பதாகவும் கூறுகின்றனர்.இது அண்ணாமலைக்கு கொடுத்த கடைசி வாய்ப்பு என்றும் தனது இடத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்றால் கட்டாயம் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் அண்ணாமலை உள்ளார்.