Breaking: நாளை அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம்! எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்த ஓபிஎஸ்!!
அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என இரு அணிகளாக இருக்கும் பட்சத்தில் இபிஎஸ் அணியில் இருந்து பலர் ஓபிஎஸ் அணிக்கும், ஓபிஎஸ் பக்கம் இருந்தவர்கள் பலர் இபிஎஸ் அணிக்கும் மாறிக்கொண்டிருக்கும் நிலையில், சிலர் இவர்களின் போட்டியினால் திமுக கட்சியில் சேர்ந்து விட்டனர்.
அந்த வகையில் அதிமுகவில் முன்னாள் பூம்புகார் தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த விஜயபாலன், சீர்காழி தொகுதி முன்னாள் எம்எல்ஏவாக இருந்த மூர்த்தி ஆகியோர் சமீபத்தில் திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.அதுமட்டுமின்றி சமீபத்தில் கூட கோவை செல்வராஜ், இவர்கள் தங்கள் சுயநலத்திற்காக போட்டியிட்டுக் கொள்கின்றனர் இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க முடியாது எனக்கூறி திமுகவில் இணைந்துள்ளார்.
இதனையடுத்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தங்களது நிர்வாகிகளை நியமிப்பதில் கவனம் செலுத்தி வந்த நிலையில் ஓபிஎஸ் தரப்பு அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் ஆனது வரும் 21ஆம் தேதி நடைபெறும் என்று கூறியது.
அந்தவகையில் நாளை நடைபெற போகும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு தற்பொழுது எடப்பாடி பழனிச்சாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பால் மீண்டும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இணையப் போகிறார்கள் என்று அரசியல் சுற்று வட்டாரங்கள் இது குறித்து பரபரப்பாக பேசி வருகின்றனர்.