தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று காலை 11 மணியளவில் ஆரம்பித்து தாக்கல் செய்து வருகின்றார் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம். பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருக்கின்ற இயற்கை ஆலமர விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி விட்டு சாமி தரிசனம் முடித்து பட்ஜெட் தாக்கல் செய்ய கிளம்பி இருக்கின்றார் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம்.
திமுகவின் பொருளாளர் துரைமுருகன் உரையாற்றுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்படாததால், திமுக உறுப்பினர்கள் சட்டசபையில் அமளியில் ஈடுபட்டனர். அதன்பிறகு பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் புறக்கணிப்பு செய்வதாக துரைமுருகன் தெரிவித்தார்.
திமுக ஆட்சி முடியும் தருவாயில் தமிழ்நாட்டின் கடன் ஒரு லட்சம் கோடியாக இருந்தது. ஆனால் தற்சமயம் 5.7 லட்சம் கோடியாக அதிகரித்து இருக்கிறது நிதி நிர்வாகத்தை சீர் குலைத்தது தான் அதிமுகவின் சாதனை என்று துரைமுருகன் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்.
அதோடு தமிழ் நாட்டின் வளர்ச்சியை அதிமுக அரசு 50 வருடங்கள் பின்னோக்கி கொண்டு சென்றுவிட்டதாகவும், தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டின் நிதி நிலைமை ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற உடன் சீரமைக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார் துரைமுருகன்.