குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் காப்பீடு! எதற்காக தெரியுமா!

0
87

தமிழ்நாட்டின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த ஓ பன்னீர்செல்வம் தமிழ்நாட்டில் கொரோனா மீட்பு நடவடிக்கைக்கு இதுவரையில் 13352 கோடி செலவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

முன்னதாக, திமுக பொருளாளர் துரைமுருகன் அவர்களுக்கு பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்படாததால் பட்ஜெட் உரையை வாசிக்க விடாமல் திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வந்தார்கள். அதோடு பட்ஜெட் கூட்டத் தொடரை முழுமையாக புறக்கணிப்பு செய்வதாக அறிவித்து திமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேறிவிட்டார்கள்.

அதோடு கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக ரூபாய் 1683 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக ஓபிஎஸ் தெரிவித்தார். தமிழக அரசின் கடன் சுமையானது தற்சமயம் 4.5 லட்சம் கோடியாக இருக்கின்றன. அடுத்த ஒரு வருடத்தில் 5.7 லட்சம் கோடியாக அதிகரிக்கும் எனவும் இடைக்கால பட்ஜெட்டில் அவர் தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டின் வறுமை கோட்டிற்கு கீழே இருக்கின்ற குடும்பங்களின் வருவாய் ஈட்டும் தலைவர் இயற்கையாகவே உயிரிழந்தால் ரூபாய் 2 லட்சம் காப்பீடு வழங்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டார்.

குடும்பத் தலைவரின் விபத்து மரணத்திற்காக, 4 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படும் எனவும், விபத்தினால் ஏற்படுகின்ற நிரந்தர இயலாமைகாக இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு கொடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.