Breaking: நெருங்கும் தேர்தல் 10 11 மற்றும் 12 பொதுத்தேர்வு விரைவில் நடத்த திட்டம்.. அன்பில் மகேஷ் பொய்யாமொழி!!

Photo of author

By Rupa

Breaking: நெருங்கும் தேர்தல் 10 11 மற்றும் 12 பொதுத்தேர்வு விரைவில் நடத்த திட்டம்.. அன்பில் மகேஷ் பொய்யாமொழி!!

Rupa

breaking-approaching-elections-10th-11th-and-12th-general-exam-plan-to-be-held-soon-love-mahesh-poiyamozhi

Breaking: நெருங்கும் தேர்தல் 10 11 மற்றும் 12 பொதுத்தேர்வு விரைவில் நடத்த திட்டம்.. அன்பில் மகேஷ் பொய்யாமொழி!!

அடுத்த ஆண்டு வரப்போகும் மக்களவைத் தேர்தலையொட்டி பெருமளவு எதிர்பார்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது. அதிமுக பாஜகவுடனான கூட்டணியை கைவிட்ட நிலையில் அடுத்து யாருடன் கூட்டணி என தொடங்கி திமுகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது வரை தமிழக அரசியலில் அடுத்தடுத்து பாரப்பாகவே காணப்படும்.

அந்த வகையில் தற்பொழுது சில கட்சிகள் திமுகவுடனான கூட்டணி தான் வைக்கப் போகிறோம் என்று தங்களது விருப்பத்தை வெளிப்படையாக  தற்பொழுது தெரிவித்து வருகின்றனர். இந்த மக்களவைத் தேர்தலையொட்டி 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வுகள் தள்ளி வைக்கப்படுமா என்ற மற்றொரு கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த தேர்தலால் எந்த ஒரு தேர்வும் பாதிக்கப்படாத வகையில் இருக்குமாறு திட்டமிடப்படும் என்ற தகவல்கள் வெளியானது. இது குறித்து பள்ளி கல்வித்துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடம் கேட்ட பொழுது, மக்களவைத் தேர்தலின் தேதிகள் கணக்கில் கொண்டு அதற்கு ஏற்றவாறு பொது தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் பணி தேர்வுக்கு முன்பெல்லாம் ஒரு போட்டி தேர்வு இருந்த பட்சத்தில் தற்பொழுது அரசாணை 149 படி மேலும் ஓர் தேர்வு நடத்த அரசானது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.இதனை ரத்து செய்ய கோரி டெட் ஆசிரியர் சங்கத்தினர் அவரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து அவர் கூறியதாவது, 2012 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தகுதியான அனைவருக்கும் ஏற்றவாறு நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார்.