Breaking: யுஜிசி எக்ஸாம் எழுதியவர்களின் கவனத்திற்கு! தேர்வு முடிவுகள் குறித்து வெளிவந்த  முக்கிய தகவல்!

0
186
Breaking: Attention of UGC Exam Writers! Important information about the exam results!
Breaking: Attention of UGC Exam Writers! Important information about the exam results!

Breaking: யுஜிசி எக்ஸாம் எழுதியவர்களின் கவனத்திற்கு! தேர்வு முடிவுகள் குறித்து வெளிவந்த  முக்கிய தகவல்!

தேசிய தேர்வுகள் முகமை கடந்த ஜூன் மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது அந்த அறிவிப்பில் இந்தியாவில் உள்ள கல்லூரிகளில உதவி பேராசிரியர்கள் பணிக்கான தகுதியையும் இளைஞர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை பெற நடத்தப்படுகிறது.

இந்த தேர்வு ஒரு ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படுகிறது.இந்த தேர்வு 84 நகரங்களில் நடத்தப்படுகின்றது.மேலும் கொரோனா பரவல் காரணமாக 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மற்றும் மே மாதம் நடைபெற இருந்த இந்த தேர்வானது நடத்தப்படவில்லை.நடப்பாண்டில் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் இரண்டு முறையாக நடத்தப்படும் தேர்வுகளை ஒரே முறையில் நடத்த தேசிய தேர்வு முகமை முடிவு செய்தது.

கடந்த ஆண்டு இந்த தேர்வினை எழுதுவதற் தகுதியானவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த தேர்விற்கு தகுதியானவர்கள் அனைவரும் விண்ணப்பித்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு  இந்த தேர்வு  நடத்தப்பட்டது.அதனை அடுத்து ஆகஸ்ட் 12,13,14 ஆகிய தினக்களிலும் நடத்தப்பட்டது. இந்நிலையில் யு.ஜி.சி நெட் தேர்வின் 2021 டிசம்பர் ,2022 ஜூன் மாத தேர்வகளுக்கான தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

மேலும் இதற்கான முடிவுகளை தேர்வர்கள் www.nta.ac.in என்ற இணையதளத்தில் உங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவிட்டு ,நெட் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.மேலும் கூடுதல் விவரங்களை www.nta.ac.in ,[email protected] என்ற இணையதள முகவரியை தொடர்பு கொள்ளலாம் என்று தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

Previous articleஜெயிலுக்கு சென்று வந்த நடிகருக்கு விஜய் தொலைக்காட்சி சீரியலில் நடிக்க வாய்ப்பு
Next articleமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உணவுகூட வழங்கவில்லை – திமுக அரசு மீது முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு