நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் இலவசம்! அதிரடி அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு!

Photo of author

By Sakthi

நாடு முழுவதும் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. இந்தநிலையில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு முயற்சி செய்தாலும் அதனை கட்டுப்படுத்த இயலாமல் மாநில அரசும், மத்திய அரசும், திணறிக் கொண்டிருக்கிறது. அதனை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்காததால் மாநில, மத்திய அரசுகளின் முயற்சிகள் வீணாகும் நிலையில் இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், இந்தியா முழுவதும் இந்த நோய் தொற்றின் 2வது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. மாநில அரசுகளுக்கு நோய்த்தொற்று தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. மாநில அரசுகளுக்கு கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் ரூபாய் 150 கொள்முதல் செய்யப்பட்டு இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது, நோய்தொற்று தடுப்பூசிகள் மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கப்படும் எனவும் மாநில அரசுகளின் கோரிக்கைகளை அடுத்து நாடு முழுவதும் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகளை இலவசமாக வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறது மத்திய அரசு.

மே மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து பதினெட்டு வயதிற்கும் மேற்பட்டோருக்கு இந்த நோய் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டு இருக்கின்ற நிலையில், நாடு முழுவதும் இந்த தடுப்பூசி இலவசமாக வழங்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பது மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.