டெல்லியில் ஆக்ஸிஜனுக்கு தடையா? காரணமானவர்களை காட்டுங்கள் தூக்கிலிடுகிறோம் நீதிபதிகள் ஆவேசம்!

0
76

நாடு முழுவதும் நோய் தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும் பொதுமக்கள் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. அதன் காரணமாக இந்த நோய்த்தடுப்பு விதி முறைகள் எதையும் பின்பற்றாமல் இருப்பதால் நோய் மீண்டும் பரவுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் டெல்லியில் இருக்கின்ற மருத்துவமனைகளுக்கு உடனடியாக ஆக்சிசன் கொடுக்காவிட்டால் தலைநகர் சீரழிந்து போய்விடும் என்று டெல்லி அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது. டெல்லியில் ஆக்சிசன் மற்றும் படுக்கை வசதி தட்டுப்பாடு காரணமாக, அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.கடந்த ஒரு வார காலமாகவே ஆக்சிசன் பற்றாக்குறை இருந்து வருகிறது. டெல்லியில் இருக்கின்ற மருத்துவமனைகளில் தட்டுப்பாடு ஏற்படுவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் தலைநகர் டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது இன்றைய தினம் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின்போது டெல்லி மாநில அரசு சார்பாக மூத்த வழக்கறிஞர் ராகுல் மெக்ரா ஆஜரானார் அந்த சமயத்தில் டெல்லியில் இருக்கின்ற தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் குறைந்து வருவதன் காரணமாக சிகிச்சை மேற்கொள்ள வரும் நோயாளிகள் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப் படுகிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

மத்திய அரசு புதுடில்லிக்கு கொடுக்கும் ஆக்சிஜன் அளவு 480 மெட்ரிக் டன் ஆக உயர்த்தப்பட்டது. ஆனால் மத்திய அரசிடமிருந்து தற்சமயம் வரையில் 280 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மட்டுமே கிடைத்து வருகிறது. தற்போது ஆக்சிஜன் தேவை அதிகரித்து இருக்கிறது. ஆக்சிஜனை சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளை தான் நாங்கள் நம்பி இருக்கிறோம். ஆனாலும் 480 மெட்ரிக் டன் ஆக்சிஜனை உடனடியாக கொடுக்காவிட்டால் டெல்லியில் நிலைமை மிக மோசமாகிவிடும் என்று தெரிவித்து இருக்கிறார்.

டெல்லியைப் பொறுத்தவரையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய இயலாத சூழ்நிலை காரணமாக, நாங்கள் வெளிப் பகுதியில் இருந்துதான் ஆக்சிஜன் கொள்முதல் செய்து வருகின்றோம். இருந்தாலும் அந்த தனியார் நிறுவனங்களும் சில சமயங்களில் ஆக்சிஜன் கொடுப்பதில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. டெல்லி மருத்துவமனைகளுக்கு தட்டுப்பாடு எதுவுமில்லாமல் ஆக்சிஜன் கிடைக்க மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் தர வேண்டும். குறைந்தது 10 அதிகாரிகள் ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்சினையை கண்காணிக்க மத்திய அரசு நியமிக்க வேண்டுமென்று தெரிவித்திருக்கிறார்.

ஆக்சிஜன் தயாரிக்கும் மையத்தை உடனடியாக உருவாக்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்சிஜன் விநியோகத்தை தடுத்து நிறுத்தும் முயற்சியில் யாராவது ஈடுபட்டால் அவர்களை நிச்சயமாக கடுமையாக தண்டிப்போம் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆக்சிஜன் விநியோகத்தை தடை செய்தார்கள் என்பதற்கு ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் கொடுங்கள் நாங்கள் அவர்களை தூக்கிலிட்டு விடுகிறோம் என்று நீதிபதிகள் காட்டமாக தெரிவித்திருக்கிறார்கள்.