Breaking: தொடர் கனமழையின் காரணமாக 4 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகள் விடுமுறை!!
வட இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல கீழெடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் கடந்த சில தினங்களாக மீதமானது முதல் கனமான மழை பெய்து வருகிறது.
அதிலும் குறிப்பாக நேற்று முன்தினம் முதல் பருவமழை தீவிரம் அடைந்ததால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது.விடாத தொடர் மழை காரணமாக சென்னை மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று நவம்பர் 2 விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.மேலும் தொடர் மழையின் காரணமாக காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.