#BREAKING : காங்கிரஸ் முன்னாள் தலைவர் மருத்துவமனையில் அனுமதி! பரபரப்பில் கட்சி தலைமையகம்!

0
191
#BREAKING : Former Congress leader admitted to hospital! Party headquarters in excitement!
#BREAKING : Former Congress leader admitted to hospital! Party headquarters in excitement!

#BREAKING : காங்கிரஸ் முன்னாள் தலைவர் மருத்துவமனையில் அனுமதி! பரபரப்பில் கட்சி தலைமையகம்!

காங்கிரஸ் முன்னாள் தலைவராக இருந்தவர் சோனியா காந்தி.இவர் காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலமாக தலைவராக இருந்தவர்.மேலும் இவர் தனக்கு பிறகு தன்னுடைய மகன் ராகுல் காந்தியை தலைவராக்கினார்.ஆனால் கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது.அதனால் ராகுல் காந்தி தலைவர் பதவியில் இருந்து விலகினார்.ராகுல் காந்தி விலகிய பின்பு மீண்டும் சோனியா காந்தியே அந்த பொறுப்பை ஏற்று கொண்டார்.

அதனையடுத்து இருபது ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்பட்ட காங்கிரஸ் தலைவர் பதவிக்கு  தேர்தல் நடத்தப்பட்டது.அப்போது அந்த பதவியானது மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு வழங்கபட்டது.மேலும் காங்கிரஸ் முன்னாள் தலைவரான சோனியா காந்திக்கு வழக்கமாக டெல்லியில் உள்ள மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்படும்.அதற்காக தற்போது சோனியா காந்தி டெல்லியில் உள்ள தனியார்  கங்கா ராம் என்ற  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது வழக்கமான பரிசோதனை தான் யாரும் பயப்பட தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.மருத்துவமனையில் அவருடைய மகளும் காங்கிரஸ் பொது செயலாளருமான பிரியங்கா காந்தி அவருடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.தற்போது உத்தர பிரதேசத்தில் ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் நடைபெற்று வருகின்றது.சோனியா காந்திக்கு பரிசோதனை அனைத்தும் முடிந்து அவர் வீடு திரும்பிய உடன் பிரியங்கா காந்தி மீண்டும் நடைப்பயணத்தில் இணைவார் என கூறப்படுகின்றது.

Previous articleகாங்கிரசின் எம்எல்ஏ திருமகன் ஈவெரா காலமானார்! முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!
Next article‘பிரின்ஸ்’ படத்தால் ஏற்பட்ட கடும் நஷ்டத்தை ஈடுசெய்ய சிவகார்த்திகேயன் எடுத்த அதிரடி முடிவு !