BREAKING: சிறுமி பாலியல் வன்கொடுமை! 10ஆண்டு சிறை,2.5 லட்சம் நிதி!
வரும் காலங்களில் அதிக அளவு பெண்களுக்கு வன்கொடுமைகள் நடந்த வண்ணமாக தான் உள்ளது.அந்தவகையில் தற்சமயம் பாதுகப்புக்கொடுக்க வேண்டிய பெண் எஸ்.பி க்கே அவரது மேல் அதிகாரி பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மேல் அதிகாரி அந்த பெண் எஸ்.பி யை பாட்டுப்பாடும் படி கூறி அவர் கைகளை பிடித்துக்கொண்டு விடாமல் பாலியல் தொல்லைக் கொடுத்தது அதிக அளவு சர்ச்சையை உண்டாக்கியது.
இப்பிரச்சனை ஆறும் முன்னரே அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் ஓய்வறையில் இருந்த ஆயுதப்படை பெண் போலீசாருக்கு முருகன் என்று அக்காவல் நிலையத்திலேயே பணிபுரிபவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் போலீஸ் காவல் துறை மத்தியில் அடுத்த சர்ச்சையாக வெடிக்க ஆரம்பித்தது.பாதுகாப்பு தர வேண்டிய அரசு அதிகாரமே இப்படி நடந்துக்கொண்டால் எப்படி பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என மக்கள் கேள்விகளை எழுப்பினர்.
இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன்.இவர் வசிக்கும் தெருவில் விளையாடி கொண்டிருந்த சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.இது அச்சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்து,ஆலங்குடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் பாலமுருகனை கைது செய்தனர்.இந்த வழக்கானது ஒரு ஆண்டு காலமாக மகிளா நீதி மன்றத்தில் நடந்து வருகிறது.அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் அங்கவி வாதாடினார்.குற்றம் செய்த பாலமுருகனுக்கு 10 ஆண்டு காலம் சிறை தண்டனையும்,25 ரூபாய் அபராதமும் நீதிமன்றம் விதித்துள்ளது.அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட அந்த சிறுமிக்க நிதி தொகையாக 2.5 லட்சம் தரக் கோரி நீதிபதி சத்யா இவ்வழக்கிற்கு தீர்பளித்தார்.