Breaking: காரில் புட்போர்டு அடித்த மேயர் பிரியா.. திமுக டிராமா கம்பெனியின் அடுத்த நாடகம்  வைரல்!

Breaking: காரில் புட்போர்டு அடித்த மேயர் பிரியா.. திமுக டிராமா கம்பெனியின் அடுத்த நாடகம்  வைரல்!!

இன்று முதல்வர் சென்னை மாநகராட்சியில் மாண்டஸ்புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளையும் வழங்கி சேதமடைந்த பகுதிகள் அனைத்தும் விரைவில் சரி செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.

மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, மாண்டஸ் புயல் காரணமாக கிட்டத்தட்ட சென்னையில் 400 மரங்கள் வேரோடு விழுந்த நிலையில் தற்போது வரை 200 க்கும் மேற்பட்ட மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் மாண்டாஸ் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு உரிய நிவாரணமும் வழங்கப்படும் என்று தெரிவித்தார். இவ்வாறு முதல்வர் வருவதற்கு முன்பே காசிமேட்டில் மேயர் பிரியா மற்றும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் ஆய்வு மேற்கொண்டனர்.

இவ்வாறு கள ஆய்வு மேற்கொள்ளும் போது மேயர் மற்றும் மாவட்ட ஆட்சியர் காரின் இரு முனைகளிலும் தொங்கியபடி சென்றது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவ்வாறு பெண்ணை தொங்கவிட்டு நாடகம் நடத்தி திமுக பொழப்பு நடத்துவதாகவும் நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

சமீபகாலமாக மேயர் பிரியா பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.அந்தவகையில் தற்பொழுது பெய்த பருவமழை காரணமாக கொசு வலைகள் அரசு சார்பில் இலவசமாக கொடுக்கப்பட்டது.இதுகுறித்து மேயர் பிரியா பேசுகையில், இலவச கொசு வலைகள் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறுவதற்கு பதிலாக இலவச கொசுக்களை வழங்குயுள்ளோம் என கூறினார்.

இதனை பலரும் விமர்சனம் செய்து பேசினர்.அதேபோல அமைச்சர் முன்னிலையில் பேட்டி நடந்துக்கொண்டிருக்கும் வேளையில் மேயருக்கு பேச நேரம் ஒதுக்காமல் அத்தனை பத்திரிக்கையாளர்கள் முன்னிலையிலும் சும்மா இரு என்ற பாணியில் அமைச்சர், மேயர் பிரியாவை கூறியதும் தீயாக பரவியது.

எனது அப்பா போன்றவர் அமைச்சர், அவர் அவ்வாறு கூறியது எனக்கு மரியாதை அளிக்காதது போல் இல்லை என்று திமுக-வின் கபட நாடகத்திற்கு இவரும் ஒத்துழைப்பு வழங்கினார்.  இதையெல்லாம் வைத்து பார்க்கையில் திராவிட மாடல் ஆட்சி அவர்களின் நிர்வாகிகளுக்கே எந்த அளவிற்கு பெண்களுக்கு மரியாதை கொடுக்கிறது என்பது நாம் அறிந்துக்கொள்ளலாம்.அதுமட்டுமின்றி திமுக மீண்டும் மீண்டும் நாடக கம்பெனி என்பதை ஏதோ ஓர் வழியில் நிருபித்துக்கொண்டே உள்ளது.

Leave a Comment