Breaking: இனி ஹிந்தி மொழியில் தான் மருத்துவ படிப்பு! நடப்பாண்டு முதல் அறிமுகம்!!அரசின் அதிரடி உத்தரவு!
தமிழகம் முழுவதும் மத்திய அரசு கொண்டுவர நினைக்கும் ஹிந்தி திணிப்பை எதிர்க்கின்றனர். குறிப்பாக நேற்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஹிந்தி திணிப்பை எதிர்த்து போராட்டம் நடத்தினார். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் பிரதமரின் கனவு திட்டமானது நடப்பாண்டு முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. பல ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமாக, மருத்துவம் மற்றும் பொறியியல் ஆகிய படிப்புகள் தாய் மொழியிலேயே மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும் என கூறினார்.
இத்திட்டம் உடனடியாக நடைமுறைப்படுத்த முடியவில்லை. ஏனென்றால் இது குறித்து பல நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டி இருந்தது. தற்பொழுது இதற்கான பாட வரைமுறைகள் வரையறுக்கப்பட்டு முடிந்ததால் நடப்பாண்டு முதல் செயலுக்கு வர உள்ளது. அந்த வகையில் மத்திய பிரதேச மாணவர்கள் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை தாய் மொழியான ஹிந்தியிலேயே இனி படிக்கலாம். அதற்காக இந்தி மொழியில் பாட புத்தகங்கள் மாற்றி அமைத்து தயாரிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் மற்றும் மருத்துவ படிப்பு மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் மொழி இந்தியா இருந்தாலும் , பாடப்புத்தகத்தில் இடம்பெறும் முக்கியமான சொற்கள் ஆங்கிலத்தில் தான் இருக்கும் என தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு முதல் மத்திய பிரதேசத்தில் 13 மருத்துவக் கல்லூரிகளில் ஹிந்தி மொழியில் பாடம் கற்பிக்கப்பட உள்ளது.இது குறித்த உத்தரவை மத்திய பிரதேசம் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.