எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு! அதிர்ச்சில் மாணவர்கள்!

0
121
Fee hike for MBBS BDS courses! Shocked students!
Fee hike for MBBS BDS courses! Shocked students!

எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு! அதிர்ச்சில் மாணவர்கள்!

மாணவர்கள் நீட் எனும் போட்டி தேர்வை எழுதி மருத்துவபடிப்பில் சேர்ந்து வருகின்றனர்.நடப்பாண்டில் நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி நடைபெற்றது.அதற்கான தேர்வு முடிவுகள் கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி வெளியிடப்பட்டது.அதனையடுத்து தனியார் மருத்துவ கல்லூரி மற்றும் அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது.

இந்நிலையில் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான ஓராண்டு கட்டணம் ரூ 4.3லட்சம் முதல் ரூ 4.5லட்சம் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கான ஓராண்டு கட்டணம் ரூ 12.5 லட்சத்தில் இருந்து ரூ 13.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.வெளிநாட்டில் வாழும் இந்தியர் இடங்களுக்கான ஆண்டு கட்டணம் ரூ 23.5லட்சத்தில் இருந்து ரூ 24.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 18 மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்.,பி.டி.எஸ் படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் மாணவர்கள் பாதிப்படைவார்கள் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்த கட்டண உய்ரவானது மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Parthipan K