தமிழகத்தை சோகத்தில் ஆழ்த்திய இளம் இசையமைப்பாளரின் திடீர் மரணம்! அதிர்ச்சி பின்னணி!

Photo of author

By Vijay

தமிழகத்தை சோகத்தில் ஆழ்த்திய இளம் இசையமைப்பாளரின் திடீர் மரணம்! அதிர்ச்சி பின்னணி!

Vijay

தமிழகத்தை சோகத்தில் ஆழ்த்திய இளம் இசையமைப்பாளரின் திடீர் மரணம்! அதிர்ச்சி பின்னணி!

மேதகு திரைப்படத்தின் இசையமைப்பாளர் பிரவீன் குமார் சற்று முன்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ் ஈழ விடுதலை ப் போராட்ட வீரர் மேதகு பிரபாகரனின் வாழ்க்கையை மையமாக வைத்து மேதகு என்ற திரைப்படம் வெளியானது.

இந்த திரைப்படத்தின் முதல் பாகத்திற்கும், இரண்டாவது பாகத்திற்கும் இசையமைத்திருந்தவர் பிரவீன் குமார். இவரின் இசை பல ரசிகர்களாலும் பாராட்டப்பட்டது.

இந்த நிலையில், இன்று காலை 6:00 மணி அளவில் சிகிச்சை பலனின்றி இசையமைப்பாளர் பிரவீன் குமார் உயிரிழந்துள்ளார். அவரின் இந்த திடீர் மரணம் தமிழ் திரை உலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஆழ்த்தியுள்ளது. மேலும் பிரவீன் குமார் மரணத்திற்கு பல திரைப் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இசையமைப்பாளர் பிரவீன் குமாருக்கு மஞ்சள் காமாலை தொற்று இருந்ததாகவும், அதனை அவர் சரிவர கவனிக்காததால் மஞ்சள் காமாலை நோய் தீவிரமடைந்துள்ளது.

கடைசி கட்டத்தில் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை 6 மணி அளவில் அவர் உயிர் பிரிந்ததாக, அவரின் நண்பரும் பிரபல சோசியல் மீடியா பிரபலம் மன்னை சாதிக் தன்னுடைய முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

<iframe src=”https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2FMannaiSathik786%2Fvideos%2F3761215997448037%2F&show_text=false&width=267&t=0″ width=”267″ height=”476″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share” allowFullScreen=”true”></iframe>

மன்னை சாதிக் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், தற்போது ஒரு படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றிக் கொண்டிருக்கும் எனது நண்பன், மஞ்சள் காமாலை இருந்ததை கவனிக்கவில்லை. இது தெரியாமல் அவன் பல நாட்கள் இருந்துள்ளான்.

அவனை தஞ்சாவூர் மருத்துவமனையில் சேர்த்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்து கொண்டிருந்தனர். ஆனால் அவர் உயிர் இன்று போய்விட்டதே.

அவன் கள்ளம், கபடம் இல்லாதவன். எந்த ஒரு தவறும் செய்யாதவன். எனவே பொதுமக்களாகிய நீங்களும் உங்கள் உடலை நன்றாக பரிசோதனை செய்து கொள்ளுங்கள். நம் உடலுக்குள் என்ன நோய் இருக்கிறது என்று நமக்கு தெரியாமல் போய்விடுகிறது. நம் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதே எனது நண்பனின் மறைவு உணர்த்துவதாக மண்ணை சாதிக் அந்த காணொளியில் தெரிவித்துள்ளார்