முக்கிய அறிவிப்பு:! வருகின்ற 25ஆம் தேதி 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம்!!
தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் கட்டிடப் பணிகள் முடிவுற்ற அரசு மருத்துவமனைகளை திறந்து வைக்க விமான மூலம் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் அவர்கள் இன்று தூத்துக்குடி வந்தடைந்தார்.விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் சந்தித்து கூறியதவாறு:
தமிழகத்தில் தற்போது அதிதீவிரமாக பரவி வரும் காய்ச்சல் பருவநிலை மாற்றத்தின் காரணமாக இருந்தாலும் இந்த காய்ச்சலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு உள்ளன.
எந்த பகுதியில் 3 நபருக்கு மேல் காய்ச்சல் உள்ளதோ அந்த பகுதியில் சிறப்பு முகாம்கள் நேற்றிலிருந்து நடத்தப்பட்டு வருகிறது.
இந்த காய்ச்சலைக் கண்டு மக்கள் அச்சமடைய வேண்டாம்.சரியான மருந்து மாத்திரைகளை எடுத்து மூன்றிலிருந்து நான்கு நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டாலே போதுமானது என்று அவர் கூறினார்.
செப்டம்பர் 30ஆம் தேதி வரை கொரோனா பூஸ்டர் தடுப்பூசி இலவசம் என்ற மத்திய அரசின் அறிவிப்பின்படி,வருகின்ற செப்டம்பர் 25ஆம் தேதி தமிழகத்தில் 50,000 இடங்களில்சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது.மேலும் வருகின்ற புதன்கிழமை ஆரம்ப சுகாதார நிலையம்,வட்டார சுகாதார நிலையம் என 1,113 மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்படும் என்று அவர் கூறினார்.
மேலும் வருகின்ற நான்காம் தேதி 14 முதல் 17 வயதுடைய பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகளிலே தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் மா. சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார்.