#BreakingNews: VPF கட்டணங்கள் ரத்து! அதிரடியாக வெளியான அறிவிப்பு!

Photo of author

By Parthipan K

திரையரங்குகளில் திரைப்படங்களை திரையிடுவதற்கான வி.பி.எஃப். (VPF) கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது கியூப் (QUBE) நிறுவனம் அறிவித்துள்ளது. நவம்பர் மாதத்தில் வெளியாகும் புதிய திரைப்படங்களுக்கு மட்டுமே வி.பி.எஃப். கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வி.பி.எஃப். கட்டணத்தை செலுத்த முடியாது என தயாரிப்பாளர்கள் அறிவித்த நிலையில் கியூப் நிறுவனம் சலுகை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த சலுகையானது நவம்பர் மாதத்திற்கு மட்டுமே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கியூப் நிறுவனத்தை தொடர்ந்து UFO நிறுவனமும் வி.பி.எஃப். கட்டணத்தை நவம்பர் மாதத்திற்கு மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.