Breaking: நம் கட்சியினர் தான் வளர வேண்டும்..அவர்கள் மட்டும் தான் மணல் அள்ள வேண்டும்!! வைரலாகும் திமுக எம்.பி யின் வீடியோ!

Photo of author

By Rupa

Breaking: நம் கட்சியினர் தான் வளர வேண்டும்..அவர்கள் மட்டும் தான் மணல் அள்ள வேண்டும்!! வைரலாகும் திமுக எம்.பி யின் வீடியோ!

திமுக ஆட்சி அமைத்தவுடன் அந்த நிர்வாகிகளுக்கு  தலைகனம் ஏறிவிட்டது போல. ஏனென்றால் பல இடங்களில் மக்களை அவதூறாகவே அக்கட்சியினர் பேசி வருகின்றனர். திமுக கட்சி நிர்வாகிகள் இவ்வாறு பேசுவதால் பல கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் ஆ ராசா இந்துக்களை குறித்து அவதூறாக பேசியது முடிவதற்குள், உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அரசு விழாவில் பெண்களைப் பார்த்து ஓசி பஸ்ஸில் செல்கிறீர்கள் தானே என்று பேசியுள்ளார். இவ்வாறு மாற்றி மாற்றி மக்களை கொச்சைப்படுத்தி பேசி வருகின்றனர். அவர்களை எச்சரிக்கும் விதமாக கவனித்து பேசும் படி முதல்வர் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதுமட்டுமின்றி பல இடங்களில் திமுக தனது அதிகாரத்தை பயன்படுத்தி பலவற்றை நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில் பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் அவர்களது மனைவியின் அதிகாரத்தை பயன்படுத்தி ஊழியர்களை மிரட்டி வருவதும் ஆங்காங்கே நடந்து தான் வருகிறது. நாளுக்கு நாள் திமுகவின் கிரைம் அப்டேட் அதிகரிக்கும் நிலையில், இன்று எம்பி ராஜேஷ்குமாரின் சர்ச்சையான பேச்சு வைரலாகியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளவர் தான் கே ஆர் என் ராஜேஷ் குமார். இவர் ஒரு வீடியோவில் திமுக உடன் பிறப்புகள் மட்டும் தான் மணல் அல்ல வேண்டும். வேறு யாரும் மணல் அள்ளக்  கூடாது என கூறியுள்ளார்.

பல மாவட்டங்களில் அம் மாவட்ட செயலாளர் அவர்கள் கட்சி உறுப்பினர்களையோ, கட்சியை சார்ந்தவர்களையோ மணல் எடுக்க அனுமதிப்பதில்லை. டெண்டர் விட்டு பணம் வசூல் செய்து கொள்கிறார்கள். ஆனால் நான் அப்படிப்பட்டவன் அல்ல. நமது கட்சியை சேர்ந்தவர்கள்  மட்டும் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் மணல் எடுக்க அனுமதி அளிக்கிறேன் எனக் கூறியுள்ளார். இவ்வாறு இவர் பேசிய இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரவுகிறது. திமுக மட்டும் வளர வேண்டும் என்றால் மற்ற மக்கள் எங்கே போவது என பொதுமக்கள் கொந்தளித்துள்ளனர்.