Breaking: வெளியூர் செல்லும் பயணிகள் கவனத்திற்கு! பேருந்துகள் இயக்கம் குறித்து முக்கிய தகவல்! 

Photo of author

By Rupa

Breaking: வெளியூர் செல்லும் பயணிகள் கவனத்திற்கு! பேருந்துகள் இயக்கம் குறித்து முக்கிய தகவல்!

தற்பொழுது மாண்டஸ் புயல் தாக்கத்தினால் புயல் உருவாகி பல மாவட்டங்களின் கனத்த மழை பெய்து வரும் நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.மேலும் சென்னை விழுப்புரம் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை காரணமாக பேருந்துகள் மற்றும் விமானம் இயக்கத்திற்கு தடை செய்து உத்தரவிட்டு உள்ளனர்.

அதுமட்டுமின்றி காஞ்சிபுரம் சேலம் தர்மபுரி நாமக்கல் கரூர் திருச்சி அதிக கன மழை காரணமாகவும் அந்த மாவட்டத்திற்கும் முன்னேற்றத்திற்கு நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளித்து உத்தரவிட்டனர்.

அந்த வகையில் இந்த மான்டஸ் புயல் ஆனது இன்று புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்கள் வெளியிட்ட நிலையில் , ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று கூறி வந்தனர்.

இது குறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், எந்த ஒரு அறிவிப்பும் அரசாங்கத்திடம் இருந்து வராத நிலையில் வழக்கம்போல் ஆம்னி பேருந்து அனைத்து மாவட்டங்களிலும் இயங்கும் என்று தெரிவித்துள்ளார்.