#Breaking: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர் அறிவிப்பு!! 

0
177
#Breaking: BAMKA candidate contesting Vikravandi by-election announced!!
#Breaking: BAMKA candidate contesting Vikravandi by-election announced!!

#Breaking: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர் அறிவிப்பு!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலானது வரும் ஜூலை மாதம் 10ஆம் தேதி நடைபெற உள்ளது.மக்களவைத் தேர்தலைப் போலவே இதிலும் கட்சிகளிடையே பெரும் போட்டி நிலவும் என்று எதிர்பார்த்து வருகின்றனர்.அதேபோல அதிமுக திமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் குறித்த பணிகளை தற்போதிலிருந்தே செய்ய ஆரம்பித்து விட்டனர்.

குறிப்பாக அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் எந்த ஒரு சிக்கலும் இல்லை.ஆனால் பாஜக சார்பாக யார் நிற்கப் போகிறார் என்பது குறித்த எதிர்பார்ப்பு பலரது மத்தியிலும் இருந்தது.நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் கூட வரமுடியவில்லை.இதற்கெல்லாம் அண்ணாமலை தான் காரணம் அதிமுக கூட்டணி இல்லாததும் இவரால் தான் என அவர்கள் கட்சி நிர்வாகிகள் வரை கூறி வந்தனர்.

அந்தவகையில் இந்த தேர்தலில் மீண்டும் பாஜக சார்பாக நின்றால் வெற்றி பெற முடியுமா என்ற கேள்வி இருந்தது.ஆனால் இந்த எதிர்பார்ப்பை எல்லாம் உடைக்கும் விதமாக நேற்று பாஜக சார்பாக பாமக போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியது.இது நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தருமபுரியில் வெற்றிப்பெற வில்லை என்றாலும் பாமக எடுத்த வாக்கு சதவீதத்தின் உயர்வு தான் தற்பொழுது இதில் போட்டியிட நேரிட்டுள்ளது.அந்த வகையில் இன்று விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாமக சார்பாக மாநில துணைத்தலைவர் சி.அன்புமணி போட்டியிடுவதாக தெரிவித்துள்ளனர்.