Breaking: சாம்பாரில் பூரான்! 50 செவிலியர் மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி!

Photo of author

By Pavithra

Breaking: சாம்பாரில் பூரான்! 50 செவிலியர் மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி!

Pavithra

Updated on:

Breaking: சாம்பாரில் பூரான்! 50 செவிலியர் மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி!

நாகப்பட்டினம் அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் நேற்று இரவு சாம்பார் தோசை சாப்பிட்ட 50 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி.

நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அரசு செவிலியர் பயிற்சி பள்ளி இயங்கி வருகிறது.இந்த பள்ளியில் தமிழகம் முழுவதுமிருந்து 287 மாணவிகள் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர்.இந்த மாணவிகளுக்கு நேற்று இரவு உணவாக தோசை மற்றும் சாம்பார் கொடுக்கப்பட்டது.

உணவினை சாப்பிட்ட 50-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டதுள்ளது.உடனடியாக இந்த மாணவிகளை மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.இதில் 20-ற்கும் மேற்பட்ட மாணவிகள் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.30-ற்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு முதல் உதவி அளிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அந்த சாம்பாரை சோதித்து பார்க்கும் பொழுது அந்த சாம்பாரில் பூரான் விழுந்து செத்து கிடந்துள்ளது தெரியவந்தது. இதன் காரணமாக தான் இந்த உணவினை சாப்பிட்ட 50-ற்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது என கூறப்படுகிறது.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.