உக்ரைன் விவகாரம்! ரஷ்யாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தியா ஏன் தெரியுமா?

0
91

ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே கடந்த பிப்ரவரி முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் கைப்பற்றிய உக்ரைன் நாட்டின் 4 பகுதிகளை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது.

இந்த போர் தொடங்கி சற்றேற குறைய 8 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், இன்னமும் இந்தப் போர் தன்னுடைய உக்கிர நிலையிலிருந்து சற்றும் பின் வாங்கவில்லை. அதோடு ரஷ்யா உக்ரைனின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி விட்டதாக சொல்லப்படுகிறது.

இதற்கு நடுவே ரஷ்யாவின் உக்ரைனின் முக்கிய பகுதிகளை தன்னுடன் நினைத்துக் கொண்ட விவகாரத்தை கண்டிக்கும் விதமாக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீது ஐநா சபையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதற்கு ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ரஷ்யா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் வெளிப்படையாக நடக்க வேண்டும் என்று இந்தியா உட்பட 107 நாடுகள் வாக்களித்தனர்.

இதனைத் தொடர்ந்து ரஷ்யாவின் ரகசிய வாக்கெடுப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ரஷ்யாவுக்கு ஆதரவாக 13 நாடுகள் மட்டுமே வாக்களித்தனர். சீனா உட்பட 39 நாடுகள் வாக்களிப்பில் பங்கு பெறவில்லை.

எப்போதும் நடுநிலையாக செயல்படும் இந்தியா தன்னுடைய உற்ற நண்பனான ரஷ்யாவிற்கு எதிராக வாக்களித்திருப்பது உலக அரங்கையே அதிர வைத்திருக்கிறது.

ரஷ்யா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இடையில் இருக்கும் நட்புறவை இந்த விவகாரம் எந்த அளவுக்கு பாதிப்புக்கு உள்ளாக்கும். இது நாள் வரையில் ரஷ்யா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே இருந்து வந்த பரஸ்பரம் நட்புறவு பாதிக்கப்படுமா? என்பது போன்ற விவாதங்கள் சர்வதேச அரங்கில் நடைபெற்று வருகின்றன.

ஆனால் ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் ரஷ்யாவிற்கு பாதகமான சூழ்நிலை ஏற்படலாம் என்ற காரணத்திற்காகவே இந்தியா இந்த தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கியிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

தொடக்க காலத்தில் இருந்து தனக்கு உற்ற தோழனாக, தன் மீது அக்கறை கொண்ட ஒரு நண்பனாக இக்கட்டான சூழ்நிலைகளில் உதவி புரிந்த ரஷ்யாவிற்கு எதிராக இந்தியா ஒருபோதும் செயல்படாது.

அப்படி செயல்பட்டாலும் அதற்குள் ஏதாவது ஒரு முக்கிய காரணம் இருக்கலாம் என்று இந்தியா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இருக்கின்ற இந்தியா, ரஷ்யா அபிமானிகள் தெரிவிக்கிறார்கள்.