BREAKING: பள்ளிகள் திறப்பது பற்றி ஐசிஎம்ஆர் (ICMR) ஆய்வறிக்கை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! இனி மேல்நிலை பள்ளிகளுக்கு விடுமுறையா?
கரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.நாளுக்கு நாள் அதன் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. என்னை கட்டுப்படுத்த பல வழிமுறைகள் வந்தாலும் அதன் தாக்கம் இன்றளவும் குறையவில்லை.தொற்றால் குணமாகி செல்வோருக்கு இணையாக பாதிக்கப்பட்டும் வருகின்றனர்.இன்னிலையில் பள்ளி கல்லூரிகள் கொரோனா தொற்று பாதிப்பால் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது தான் திறக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் பல மாநிலங்களில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று தாக்கத்தால் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்றளவும் பள்ளிகள் திறக்கப்பட வில்லை. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அதாவது ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து இந்திய மருத்துவ ஆராய்சி ஐசிஎம்ஆர்( ICMR )ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவுகள் அனைவரையும் வியப்படையச் செய்துள்ளது.ஏனென்றால் ஆரம்பகட்ட கல்வி மாணவர்கள் பள்ளிக்கு வந்தால் கொரோனா தொற்றால் பாதிப்படைவர் என்று கூறி அவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது.ஆனால் இவர்களது ஆய்வில் கூறியதாவது,ஆரம்பக் கல்வி மாணவர்களுக்கு பாதிப்பானது குறைவாக காணப்படுகிறது.
இதனால் அவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் படலாம் என்று கூறியுள்ளனர்.ஒவ்வொரு மாநிலங்களிலும் தொற்றுக்கு ஏற்றார்போல் பல வழிகாட்டு நெறிமுறை பின்பற்றி பள்ளிகளை திறக்கின்றனர்.குறிப்பாக டெல்லியில் மேல்நிலைப்பள்ளிகள் முதல் திறக்கப்பட்டது.அதனையடுத்து துவக்கப் பள்ளிகள் திறக்கப்பட்டது.ஆனால் 12 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு அதிக அளவு தொற்று பாதிப்பு உண்டாகியுள்ளது.அந்த வகையில் பார்க்கும் பொழுது முதலில் துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட வேண்டும்.
மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தொற்று பாதிப்பு அதிகமாக காணப்படுவதால் சிறிது நாட்கள் கழித்து திறக்கலாம் என இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளனர்.இந்த ஆய்வரிக்கையானது ஐசிஎம்ஆர் இன் இயக்குனர் ஜெனரல் டாக்டர் பல்ராம் பார்க்கவாவின் மேற்பார்வையில் நடைபெற்றது.மேலும் ஐசிஎம்ஆர் தலைமை தொற்று நிபுணர்கள் டாக்டர் சமீரான் பாண்டா மற்றும் டாக்டர் தனு ஆகியோரும் இந்த ஆய்வில் ஈடுபட்டனர் என்பது குறிபிடத்தக்கது.