Breaking: தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ்!

Photo of author

By Rupa

Breaking: தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ்!

Rupa

Breaking: Tamil Nadu government's announcement! 10 percent bonus for government employees!

Breaking: தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ்!

தீபாவளி பண்டிகை வருகை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ 7000 வரை போனஸ் வழங்குவதாக தெரிவித்திருந்தது. அதற்கு அடுத்தபடியாக புதுவை அரசும் சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு போனஸ் குறித்து அறிவிப்பை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது தமிழக அரசும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு  போனஸ் வழங்குவது குறித்து கூறியுள்ளது.

அரசின் பொதுத்துறை நிறுவனங்களான மின்சார வாரியம், ஆவின் பாலகம், டாஸ்மாக் ஆகியவற்றில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது குறித்து தமிழக அரசு அறிவிப்ப ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சி மற்றும் டி பிரி ஊழியர்களுக்கு 10% வரை போனஸ் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். அந்த வகையில் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத்தொகை என்ற அடிப்படையில் மொத்தம் 10 சதவீதம் வழங்கப்பட உள்ளதாக கூறியுள்ளனர். தமிழக அரசின் இந்த 10% போனஸ் ஆனது பொதுத்துறை ஊழியர்களிடத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.