அதிர்ச்சி உடைந்தது அதிமுக கூட்டணி! முக்கிய கட்சி வெளியேற்றம்!

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டில் தேர்தல் வருவதை முன்னிட்டு தமிழக அரசியல் களைகட்டி வருகின்றது. இதனை தொடர்ந்து திடீர் திடீரென்று திருப்பங்கள் நிறைந்த ஒரு விளையாட்டைப் போல தமிழக அரசியல் மாறிவிட்டது. சசிகலாவின் பங்கு எதிர்வரும் தேர்தலில் பெரிய அளவில் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகின்ற நிலையில், தங்களுக்கு போதிய முக்கியத்துவம் தொகுதிப் பங்கீட்டில் கூட்டணியிலும் கொடுக்கப்படவில்லை என்று அமைச்சர் தங்கமணி உடனான பேச்சுவார்த்தை தவிர்த்துவிட்டு தேமுதிக சென்று விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விவகாரம் தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாகவும், தொகுதி பங்கீட்டில் அதிக கட்டப்பட்டதாகவும், பேச்சுவார்த்தையின்போது தேமுதிக கட்சிக்கு போதிய முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் இருந்ததால் கூட்டணியிலிருந்து தேமுதிக விலக வேண்டிய ஒரு நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவே தெரிவிக்கப்படுகின்றது.

பிரேமலதா விஜயகாந்த் அவர்களும் சுதீஷ் அவர்களும் முன்னரே கூட்டணிக்காக தேமுதிக எப்பொழுதும் காத்திருக்க வில்லை எனவும் தமிழ்நாட்டில் எல்லா தொகுதிகளிலும் தேமுதிக தனித்து போட்டியிடவும் தயக்கம் காட்டவில்லை என்றும் தெரிவித்து வந்தார்கள். கூட்டணி உறுதி செய்யப்பட்டால் 20 தொகுதிகள் முதல் 25 தொகுதிகள் வரை மட்டுமே தேமுதிகவிற்கு அதிமுக சார்பில் கொடுக்கப்படலாம் என்ற சூழ்நிலையில், விருப்ப மனு தாக்கல் செய்வதிலும் தேமுதிக எல்லா தொகுதிகளிலும் விருப்பமனு பெறப்படும் என்று அதிமுகவிற்கு அதிர்ச்சி கொடுத்தது.

பாட்டாளி மக்கள் கட்சி உடனான பேச்சு வார்த்தை ஒரு சுமூகமான நிலையை அடைந்து கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலை உறுதியான நிலையில், தேமுதிக உடனான பேச்சுவார்த்தை இழுபறியாகவே இருந்து வந்தது. சென்னை வந்த அமித்ஷா சசிகலாவை எப்படியேனும் அதிமுகவின் கூட்டணிக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருவதன் காரணமாக, பாஜக உடனான தொகுதி விவகாரமும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இந்த சூழ்நிலையில் பேச்சுவார்த்தையை புறக்கணிப்பு செய்துவிட்டு தேமுதிகவின் முக்கிய நிர்வாகிகள் புறப்பட்டுச் சென்றது அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. அதோடு கமலஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியுடன் தேமுதிக கூட்டணி வைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.