திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி! என்ன ஆனது அவருக்கு!

Photo of author

By Sakthi

தேர்தலுக்குப் பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்ற சில தினங்களாகவே சோர்வாக காணப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது. தேர்தலுக்கு முன்பு சூறாவளியாக பணியாற்றிவந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சமீபகாலமாக சற்று சோர்வுடன் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதோடு அவர் அடிக்கடி ஓய்வில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்றைய தினம் உடல் நலக் குறைவு காரணமாக திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னையில் இருக்கின்ற ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நோய்த்தொற்று இல்லை என்பது உறுதியாகி விட்டது. ஆனாலும் அவர் நேற்றே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் இ.பி.எஸ் அவர்களுக்கு குடல் இறக்க அறுவைசிகிச்சை செய்த்ந்ப்பட்டதாகவும், தற்சமயம் அவர் நலமுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சில மருத்துவ காரணங்களுக்காக சுமார் மூன்று தினங்கள் மருத்துவமனையில் ஓய்வெடுப்பார் என்று மருத்துவமனை சார்பாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.