இன்றைய மோசமான வாழ்க்கை முறையில் புற்றுநோய் பாதிப்பு யாருக்கு வேண்டுமாலும் ஏற்படலாம்.ஆண்,பெண் பாகுபாடின்றி யாருக்கு வேண்டுமானாலும் புற்றுநோய் கட்டிகள் ஏற்படுகிறது.இன்று பல வகை புற்றுநோய்கள் கண்டறியப்பட்டிருக்கிறது.இதில் பெண்களை அதிகம் பாதிக்க கூடிய புற்றுநோய்களில் ஒன்று மார்பக புற்றுநோய்.
இது பெண்களின் மார்பு திசுக்கள் மூலம் இந்த புற்றுநோய் உருவாகிறது.மார்பக பகுதியில் கட்டி ஏற்படுதல் இதற்கான ஆரம்ப அறிகுறிகளாகும்.ஆனால் எல்லா கட்டிகளும் புற்றுநோய்களை ஏற்படுத்தும் கட்டிகள் அல்ல.சிறு வயது பெண்களின் மார்பில் கட்டிகள் தோன்றினால் அது சாதாரண கட்டிகள் தான்.அதை மருத்துவர் வழங்கும் மருந்து மாத்திரைகள் மூலம் குணப்படுத்தி விடலாம்.
ஆனால் 30 வயதிற்கு மேல் இருக்கும் பெண்களின் மார்பில் கட்டிகள் தென்பட்டால் அதை அலட்சியம் கொள்ளக் கூடாது.மார்பகத்தில் ஏற்படும் கட்டிகளை தவிர வேறு சில காரணங்களும் மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகளாக இருக்கிறது.
மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகள்:
1)மார்பு முலைக்காம்பு தோற்றத்தில் மாற்றம் ஏற்படுதல்
2)அதிகப்படியான மார்பக வலியை அனுபவித்தல்
3)அதிகமான உடல் சோர்வு உண்டதால்
4)முலைக்காம்பு வெளியேறுதல்
5)தோல் அமைப்பில் மாற்றம் ஏற்படுதல்
6)உடல் எலும்பு வலி அதிகமாதல்
மார்பகத்தில் ஏற்படும் கட்டிகள் அனைத்தும் புற்றுநோயை உண்டாக்குவதில்லை.ஆனால் மார்பகத்தில் அசாதாரண கட்டிகள் தென்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்து உரிய மருத்துவ பரிசோதனை செய்து கொண்டால் அதில் இருந்து எளிதில் மீண்டு விடலாம்.