Breast Pain: இடது பக்க மார்பில் ஊசி குத்துவது போன்ற உணர்வு ஏற்டுகிறதா? இதனால் மாரடைப்பு ஏற்படுமா?
உங்கள் இடது மார்பக பகுதியில் சுருக்கென்று ஊசி குத்துவது போன்ற உணர்வை வாழ்க்கையில் ஒருமுறையாவது உணர்ந்திருப்பீர்கள்.இந்த பாதிப்பை ஆண்களை விட பெண்கள் தான் அதிகளவு சந்திக்கின்றனர்.இவ்வாறு ஏற்படும் வலி மாரடைப்பிற்கான அறிகுறியாக இருக்குமோ என்று பலர் அஞ்சுகின்றனர்.
ஆனால் இவை பெரும்பாலும் ஹார்மோன் மாற்றங்களால் நிகழக் கூடியவையாகும்.அது மட்டுமின்றி அதிகப்படியான மன அழுத்தம்,மார்பு பகுதியில் கட்டி உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்தாலும் இது போன்ற ஊசி குத்தல் மற்றும் வலி உணர்வு ஏற்படும்.
குருத்தெலும்புகளில் ஏற்படக் கூடிய அலர்ஜி,வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்பு ஆகியவை காரணமாகவும் இந்த குத்தல் உணர்வு ஏற்படும்.உங்கள் நுரையீரல் பகுதியில் இரத்தம் கட்டி இருத்தல்,நிமோனியா பிரச்சனை உள்ளிட்டவைகளாலும் இடது பக்க மார்பில் சுருக்கென்று வலி ஏற்படும்.
இந்த ஊசி குத்தல் உணர்வு நீங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை தவறாமல் பின்பற்றி வரவும்.
1)இஞ்சி
2)வெள்ளரிக்காய் சாறு
3)தேங்காய் தண்ணீர்
ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும்.பிறகு ஒரு துண்டு வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மிக்ஸி ஜார் எடுத்து அதில் இடித்த இஞ்சி மற்றும் நறுக்கிய வெள்ளரிகாயை சேர்த்து ஒரு கிளாஸ் தேங்காய் தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.
இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு ஊற்றி குடித்து வந்தால் இடது பக்க மார்பு பகுதியில் ஏற்படும் ஊசி குத்தல் உணர்வு முழுமையாக நீங்கும்.