35 வயதிற்கு பிறகு பாலூட்டும் தாய்மார்கள் கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!! மிஸ் பண்ணிடாதீங்க!!

Photo of author

By Rupa

பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஒரு ஊட்டச்சத்து மிக்க பானமாக திகழ்கிறது.குழந்தைகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் தாய்ப்பாலில் கிடைத்துவிடுகிறது.குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க,நோய் தொற்றுகள் அண்டமால் இருக்க தாய்ப்பால் கொடுப்பது அவசியமாகிறது.

குழந்தைகளுக்கு இரண்டு வயது வரை தாய்ப்பால் கொடுப்பதை தொடர வேண்டுமென்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.அதேபோல் பெண்கள் 35 வயதிற்குள் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமென்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.ஆனால் இன்று பெரும்பாலான பெண்கள் வயது கடந்து திருமணம் செய்வதால் அவர்களுக்கு குழந்தை பிறப்பு தள்ளி போகிறது.சில பெண்கள் 35 வயதை கடந்த பின்னர் தாய்மையை அடைகின்றனர்.

ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம்,ஹார்மோன் மாற்றங்கள் போன்ற காரணங்களால் வயது கடந்த பின்னர் குழந்தை பெற்றுக் கொள்வது சவாலாக மாறிவிடுகிறது.35 வயதை கடந்த பாலூட்டும் தாய்மார்கள் சில விஷயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

தாய்ப்பாலில் ஊட்டச்சத்துக்கள்,ஆன்டி பாடிகள்,கொழுப்பு,புரதங்கள்,கார்போஹைட்ரேட்டுகள், நோயெதிர்ப்பு காரணிகள் போன்றவை அதிகம் நிறைந்திருக்கிறது.தாய்ப்பால் என்பது தாய்க்கும் குழந்தைக்கும் இடையே ஒரு பிணைப்பை வலுப்படுத்த உதவுகிறது.ஆனால் 35 வயதிற்கு மேல் உள்ள பாலூட்டும் தாய்மார்கள் நிறைய சவால்களை எதிர்கொள்ள நேரிடுகிறது.

35 வயதை கடந்த தாய்மார்கள் மருத்துவர் ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.மருத்துவரின் வழிகாட்டல் இருந்தால் குழந்தைகளுக்கு தடையின்றி பாலூட்ட முடியும்.

நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவில் புரதங்கள்,ஆரோக்கிய கொழுப்புகள்,வைட்டமின்கள்,தாதுக்கள் உள்ளிட்டவை நிறைந்திருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.ஊட்டச்சத்து மிக்க உணவுகள் மற்றும் பானங்கள் அருந்த வேண்டும்.

உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் அருந்த வேண்டும்.மன அழுத்தம் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.உடலுக்கு தேவையான ஓய்வு கிடைப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.