சிறிது தூரம் நடந்தாலோ அல்லது மாடிப்படி ஏறினாலோ அதிகம் மூச்சு வாங்குகிறது என்று சிலர் புலம்புகின்றனர்.சிலருக்கு அதிகமாக சிரித்தாலே மூச்சு வாங்குதல் பிரச்சனை ஏற்படுகிறது.இந்த பிரச்சனையை சித்த வைத்தியம் மூலம் எளிதில் குணப்படுத்திக் கொள்ளலாம்.
மூச்சு இரைத்தல் காரணங்கள்:-
1)சுவாசப்பாதையில் நோய் தொற்று ஏற்படுதல்
2)ஒவ்வாமை
3)ஆஸ்துமா பாதிப்பு
4)நீண்ட கால நுரையீரல் பாதிப்பு
5)உடல் பருமன்
6)இதய நோய்
7)வயது முதுமை
மூச்சு இரைத்தல் அறிகுறிகள்:-
1)நெஞ்சு பகுதியில் இறுக்க உணர்வு
2)மூச்சுத் திணறல்
3)சீரற்ற இதயத் துடிப்பு
4)வேகமாக சுவாசித்தல்
தேவையான பொருட்கள்:-
1)துளசி – ஒரு கைப்பிடி
2)தூதுவளை இலை – ஒரு கைப்பிடி
3)கண்டங்கத்திரி – கால் கப்
4)தேன் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
1.முதலில் ஒரு கைப்பிடி துளசி இலை,ஒரு கைப்பிடி தூதுவளை இலை மற்றும் கால் கப் கண்டங்கத்திரியை வெயிலில் நன்றாக காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
2.பின்னர் இதனை தனி தனியாக பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இதை ஈரமில்லாத டப்பாக்களில் போட்டு சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.இதை செய்ய நேரம் இல்லாதவர்கள் நாட்டு மருந்து கடையில் துளசி இலை பொடி,தூதுவளை இலை பொடி,கண்டங்கத்திரி பொடி கிடைக்கும்.தங்களுக்கு தேவையான அளவு வாங்கிக் கொள்ளலாம்.
பயன்படுத்தும் முறை:-
கிண்ணம் ஒன்றை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.அதில் கால் தேக்கரண்டி துளசி பொடி,கால் தேக்கரண்டி தூதுவளை இலை பொடி மற்றும் கால் தேக்கரண்டி கண்டங்கத்திரி பொடி சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.
அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி தூயத் தேன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யுங்கள்.இதை இரவு நேரத்தில் சாப்பிட்டு வந்தால் மூச்சு இரைத்தல் பிரச்சனை குணமாகும்.அதேபோல் இந்த பொடியை வெது வெதுப்பான தண்ணீரில் கலந்தும் பருகலாம்.
அதேபோல் வெங்காயத்தை நறுக்கி தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் மூச்சு இரைத்தல் குணமாகும்.சுவாசப் பயிற்சி,யோகா போன்றவற்றை செய்வதன் மூலம் மூச்சுத் திணறலை சரி செய்யலாம்.