கொய்யா இலையில் டீ போட்டு பருகி 10 ஆரோக்கிய நன்மைகளை பெற்றுக் கொள்ளுங்கள்!!

0
113

நம் கண் முன்னே உள்ள மூலிகை கொய்யா இலை பல பாதிப்புகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.இந்த கொய்யா இலையில் டீ செய்து பருகி வந்தால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.

 

1)கொய்யா இலையில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் குடல் ஆரோக்யத்தை மேம்படுத்த உதவுகிறது.கொய்யா இலை டீ செரிமானத்தை எளிதாக்குகிறது.அதோடு மலச்சிக்கல் பாதிப்பை சரி செய்ய உதவுகிறது.

 

2)கொய்யா இலை டீ பருகுவதால் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை அதிகரித்து உடலில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

 

3)வைட்டமின் சி சத்து நிறைந்து காணப்படும் கொய்யா இலையில் டீ செய்து பருகி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

 

4)கொய்யா இலை டீ பருகி வந்தால் உடலில் புற்றுநோய் செல்கள் வளர்ச்சி முற்றிலும் தடுக்கப்படும்.

 

5)உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள கொய்யா இலை டீ பருகி வரலாம்.

 

6)கொய்யா இலையில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண் சம்மந்தபட்ட பாதிப்புகளை குணமாக்க உதவுகிறது.

 

7)கொய்யா இலையில் டீ செய்து பருகி வந்தால் மன அழுத்தம் குறையும்.உடல் சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக இருக்க கொய்யா இலையில் டீ செய்து பருகுங்கள்.

 

8)உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைத்து உடலை பிட்டாக வைத்துக் கொள்ள கொய்யா இலை டீ பருகலாம்.

 

9)மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிறு வலி குணமாக கொய்யா இலை டீ குடிக்கலாம்.

 

10)முடி உதிர்தல் மற்றும் தோல் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாக கொய்யா இலை டீ பருகலாம்.

 

கொய்யா இலை டீ செய்வது எப்படி?

 

தேவையான பொருட்கள்:

 

1)கொய்யா இலை – ஒன்று

2)தேன் – ஒரு தேக்கரண்டி

3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

 

செய்முறை விளக்கம்:

 

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு இரண்டு பிஞ்சு கொய்யா இலையை பொடியாக நறுக்கி அதில் போட்டு கொதிக்க வைத்து கிளாஸிற்கு வடிகட்டவும்.பிறகு இதில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்தால் சுவையான கொய்யா இலை டீ தயார்.

Previous articleஉடலில் குட் கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் உலர் விதை ட்ரிங்க்!! 7 நாளில் ரிசல்ட் கிடைக்கும்!!
Next articleகரப்பான் பூச்சியின் தொல்லைக்கு முடிவுகட்ட வேண்டுமா? அப்போ இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!!