கையில் லஞ்ச பணம்!! திடீரென என்ட்ரீ கொடுத்த போலீசாரால் அரசு அதிகாரி செய்த அதிர்ச்சியான செயல்!!
கையில் லஞ்சம் வாங்கிய பணத்துடன் நின்ற அரசு அதிகாரி போலீசார் வருவதைக் கண்டதும் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.
அங்கு அரசு அதிகாரி ஒருவர் போலீசை பார்த்ததும் லஞ்சம் ரூ.5 ஆயிரத்திற்கான நோட்டுகளை தின்று விழுங்கினார்.
மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள கத்னி நகரில் வருவாய் துறை அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் பத்வாரி கஜேந்திர சிங். இந்த நிலையில் பர்கேடா கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் ஒரு வேலையாக கஜேந்திர சிங்கிடம் சென்றுள்ளார். ஆனால், அந்த வேலைக்கு , அவரிடம் கஜேந்திர சிங் ரூ.5 ஆயிரம் லஞ்ச பணம் தரும்படி கேட்டுள்ளார்.
இதையடுத்து அந்த கிராமவாசி லோக் ஆயுக்தா சிறப்பு போலீஸ் குழுவினரிடம் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து, போலீசார் அந்த அதிகாரியை பொறி வைத்து பிடிப்பது என திட்டமிட்டனர். இதன்படி, கிராமவாசி கஜேந்திர சிங்கின் தனி அலுவலகத்திற்கு சென்று ரூ.5 ஆயிரம் லஞ்ச பணம் கொடுத்துள்ளார். அதனை பெற்று கொண்ட கஜேந்திர சிங்கை மறைந்திருந்த போலீஸ் அதிகாரிகள் சுற்றி வளைத்தனர்.
போலீசாரை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த கஜேந்திரா சிங் உடனே உஷாராகி லஞ்ச பணம் முழுவதையும் தின்று உள்ளார். இதனால் அதிர்வடைந்த போலீசார் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது அவர் நலமுடன் உள்ளதாக என தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பணத்துடன் பிடிபட்டதும் தப்பிக்க அதை அரசு அதிகாரி தின்று விழுங்கியது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.