சூரியனைச் சுற்றி பிரகாசமான ஒளி வட்டம்!

0
166

சூரியனைச் சுற்றி ஏற்பட்ட பிரகாசமான ஒளி வட்டத்தை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.

திருவள்ளூர்: ஆவடியில் இன்று காலையில் இருந்தே வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்தது. கோடை காலத்தைப்போல வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் மதியம் 1 மணி அளவில் திடீரென சூரியனைச் சுற்றி ஒளி வட்டம் ஒன்று தோன்றியது. இதனால் சூரியன் இன்னும் பிரகாசமாக ஒளிர்ந்தது.

வானவில் தோன்றும்போது ஏற்படும் வண்ண நிறங்கள் போல வட்டத்தின் விளிம்பில் சூழ்ந்திருந்தது.

திடீரென வானில் தோன்றிய இந்த அதிசயத்தை ஆவடி பகுதியில் உள்ள பொதுமக்கள் பலரும் தெருக்களில் திரண்டு கண்டு ரசித்தனர். ஏராளமானோர் தங்கள் வீட்டு மாடிக்கு சென்று இந்த ஆபூர்வ நிகழ்வை கண்டு ரசித்தனர். அத்தோடு இந்த நிகழ்வை செல்பேசியில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இப்புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Previous articleபங்குச்சந்தை எழுச்சிக்கு, கொடிகட்டி பறக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தான் காரணமா?
Next articleவறண்ட சருமத்திற்கு கடலை மாவை இப்படி யூஸ் பண்ணுங்க!