அட்டகாசமான கேட்ச் பிடித்த ரோகித் சர்மா!! அடுத்து கோலி செய்த காரியம் வைரலாகும் வீடியோ!!

அட்டகாசமான கேட்ச் பிடித்த ரோகித் சர்மா!! அடுத்து கோலி செய்த காரியம் வைரலாகும் வீடியோ!!

இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ஷனகாவின் கேட்சை பிடித்த ரோஹித் சர்மாவை, கோலி பாராட்டிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

6 நாடுகள் பங்கேற்கும் 16-ஆவது ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இலங்கையில் உள்ள கொழும்பு நகரின்  பிரேமதாசா ஸ்டேடியத்தில் சூப்பர் 4   சுற்றுகள் நடைபெறுகின்றன. இந்த ஆட்டத்தில்  லீக் சுற்றில் வெற்றி பெற்று அடுத்து நடைபெற இருக்கும், சூப்பர் 4 சுற்றில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆகிய நாடுகள் இடம்பெற்றன.

இந்த சூப்பர் 4   சுற்றில் 4 அணிகளும் தலா ஒருமுறை மற்ற அணிகளுடன் மோத வேண்டும். அதில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்குள் நுழையும்.

இந்த சூழ்நிலையில் சூப்பர்  4-இன் 4-வது ஆட்டத்தில் பாகிஸ்தானை வென்ற இந்தியாவும், நடப்புச் சாம்பியன் இலங்கையும் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் இணைந்து முதல் இன்னிங்சை தொடங்கினர்.

அதையடுத்து சுழலுக்கு சாதகமான அந்த ஆடுகளத்தில் இந்திய அணி 49.1 ஓவர்களில் 213 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. எதிரணி தரப்பில் துனித் வெல்லாலகே 5 விக்கெட்டுகளும், சரித் அசலாங்கா 4 விக்கெட்டுகளும் மற்றும் மகேஷ் தீக்ஷனா ஒருவிக்கட்டும் வீழ்த்தி இருந்தனர்.

அடுத்ததாக 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியை பழிவாங்கும் விதமாக 41.3 ஓவரில் 172 ரன்களில் இந்திய பந்துவீச்சாளர்கள் ஆல் அவுட் செய்தனர். இதனால் 41 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக நுழைந்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும், ஜடேஜா மற்றும் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்த ஆட்டத்தின் போது ரவீந்திர ஜடேஜா 26 வது ஓவரை வீச வந்தார். அப்போது அவரின் முதல் பந்தினை இலங்கை அணியின் கேப்டன் ஷனகா அடிக்கவே ரோஹித் சர்மா அதே அலேக்காக கேட்ச் செய்தார்.

இந்திய வீரர்கள் அனைவரும்அதை மிகவும் மகிழ்ச்சியாக  கொண்டாடத் தொடங்கினர். அதில் உச்சமாக விராட் கோலி ஓடி வந்து ரோகித் சர்மாவை கட்டி அணைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி செம வைரலாகி வருகிறது.