தம்பி! உங்க காமெடி கொஞ்சம் கம்மி பண்ணிக்கோங்க! நாங்க பாவம்! – சிவகார்த்திகேயன்!

Photo of author

By Kowsalya

குக் வித் கோமாளி என்று சமையல் நிகழ்ச்சியில் பிரபலமான சக்தி அவர்கள் இன்று பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதற்கு சிவகார்த்திகேயன் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதை சக்தி இன்ஸ்டாகிராம் பேஜில் பதிவு செய்து தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார்.

குக் வித் கோமாளி என்ற ஒரு சமையல் நிகழ்ச்சி பலருக்கு பல்வேறு விதமான வாய்ப்புகளை கொடுத்துள்ளது. அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி உள்ளது. அப்படி குக் வித் கோமாளி சீசன் இரண்டில் அறிமுகமானவர் சக்தி.

இவர் டிக் டாக் செயலின் மூலம் பிரபலமானவர். இப்பொழுது விஜய் டிவியின் ஒரு அங்கமான மீடியா மேசன்ஸ் என்ற யூடியூப் சேனலிலும் தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

இன்று பிறந்த நாள் கொண்டாடும் சக்திக்கு பல சின்னத்திரை நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் சக்திக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் அவர் கூறியதை சக்தி அப்படியே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் கமெண்ட்டுகளை அள்ளி தெளித்து வருகிறார்கள்.

அதில் சிவகார்த்திகேயன் கூறியது, ” ஹலோ தம்பி, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், இந்த வருடம் உங்களுக்கு நீங்க ஆசைப்படுகிற எல்லாமே கிடைக்கட்டும். ஆனா ஒரே ஒரு வேண்டுகோள், உங்க காமெடி மட்டும் கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணிக்கோங்க தம்பி, அதுவும் பழைய ஜோக்குகளை கொஞ்சம் கம்மி பண்ணிக்கோங்க, தம்பி நாங்கல்லாம் பாவம், வீட்லயே இருங்க,பத்திரமா இருங்க, பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

அதற்கு சக்தி பதில் அளித்துள்ளார், ” அண்ணா மிகவும் நன்றி! Made my day,
கண்டிப்பா இந்த பர்த்டே இருந்து upgrade பண்ணிட்றன். Love you anna! உங்களிடம் இருந்து இந்த வாழ்த்துக்கள் எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்று! என கூறியுள்ளார்.

அனைவரும் மற்றும் மக்களும் இதை கேட்டு மகிழ்ந்து வருகின்றனர்.

அந்த வீடியோ உங்களுக்காக,
https://www.instagram.com/p/CP5lUARh28I/?utm_source=ig_web_copy_link