ஈரோடு மாவட்டத்தில் தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்த அண்ணனை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கமலா நகரை சேர்ந்த மனோகரன் என்பவருக்கு சங்கர் (30)மற்றும் தினேஷ்(20) என இரு மகன்கள் உள்ளனர். இவ்விருவருமே சமீபகாலமாக கட்டட தொழில்களுக்கு சென்ற வருகின்றனர். சங்கருக்கு திருமணமாகி மனைவியுடன் வண்டிக்காரன் ஒரு கோவில் பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார். சங்கர் என்பவருக்கு குடிப்பழக்கம் சில நாட்களுக்கு முன் தொடங்கிய நிலையில், தினமும் குடித்து விட்டு வருவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இதனால் மனைவி கோபித்துக்கொண்டு அவரது அம்மா வீட்டிற்கு சென்றதால், கடந்த 3 மாதமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இருப்பினும் சங்கர் தொடர்ந்து மது அருந்துவதை நிறுத்த வில்லை. இந்நிலையில், சனிக்கிழமை இரவு குடிபோதையில் கீழே விழுந்து அடிபட்டு காயத்துடன் வீட்டிற்கு சென்றுள்ளார் .இதனை பார்த்த தந்தை மற்றும் தம்பி தினேஷ் ஆகியோர் சங்கரை கடுமையாக திட்டியுள்ளனர்.
பின்னர் சங்கர் உடலில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஈரோடு அரசு பொது மருத்துவமனைக்கு சென்றுள்ளார். சிகிச்சை எடுத்துக் கொண்டு மீண்டும் வீடு திரும்பிய அண்ணன், ஞாயிற்றுக்கிழமை காலை தினேஷ் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் கத்தியால் இடதுபக்க தலையில் பலமாக குத்தியுள்ளார் .இதனால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பின்னர் சங்கர் கருங்கல்பாளையம் காவல் நிலையத்திற்கு தானே சென்று சரண் அடைந்துள்ளார். சங்கரை கைது செய்த காவல்துறையினர் ,தினேஷ்ன் உடலை பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும்,அண்ணன் தம்பியை கொலை செய்ததால் அப்பகுதியில் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.