குடிபோதையில் சொந்த தங்கை என்றும் பார்க்காமல் வாலிபர் செய்த காரியம்

Photo of author

By Parthipan K

குடிபோதையில் வாலிபர் ஒருவர் தன்னுடைய சொந்த சகோதரி என்று கூட பார்க்காமல் அவர் வீட்டில் வெடிகுண்டுகளை வீசி கொலை அவரை செய்ய முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் பாலமேடு அருகிலுள்ள ராமகவுண்டன் பட்டியை சேர்ந்தவர் தான் முருகன். மதுப்பழக்கத்திற்கு அடிமையான முருகன் அடிக்கடி குடித்துவிட்டு போதையில் தனது சொந்த சகோதரியான செல்வராணியிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வழக்கம் போல நேற்று இரவும் முருகன் குடித்துவிட்டு செல்வராணியுடன் சண்டையிட்டுள்ளார்.

தினமும் குடித்துவிட்டு சண்டையிடும் முருகனை கண்டிக்கும் விதமாக அவரது தங்கை செல்வராணி இதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் இதுகுறித்து முருகனிடம் சண்டை போட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முருகன் தனது நண்பன் சின்னத்துரை என்பவரின் உதவியுடன் தனது சகோதரியை கொலை செய்யும் நோக்கத்துடன் அவரது வீட்டில் 4 வெடிகுண்டுகளை வீசியுள்ளார்.

அவர் வீசிய இந்த வெடிகுண்டுகள் வெடித்ததில் செல்வராணி மற்றும் அவரது இரண்டு மகன்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். ஆனால் இந்த சம்பவத்தில் அவர்கள் வீட்டில் வளர்த்து வந்த நாய் உடல் சிதறி உயிரிழந்துள்ளது.

இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் தலைமறைவாக இருந்த முருகனை கைது செய்துள்ளனர். மஐம் அவருக்கு உதவியாக இருந்த அவரது நண்பன் சின்னத்துரை என்பவரை தேடிவருகின்றனர்.