ஹெலிகாப்டர் வடிவில் காரை உருவாக்கிய சகோதரர்கள் – பறிமுதல் செய்த காவல்துறை, காரணம் என்ன ?

0
250
#image_title

ஹெலிகாப்டர் வடிவில் காரை உருவாக்கிய சகோதரர்கள் – பறிமுதல் செய்த காவல்துறை, காரணம் என்ன ?

உத்தரப்பிரேதேச மாநிலம், அம்பேத்கார் நகர் பீட்டி என்னும் எல்லைக்குட்பட்ட பகுதி தான் கஜூரி பஜார். இப்பகுதியினை சேர்ந்தவர் ஈஸ்வர் தீன். இவர் தன்னிடம் உள்ள வேகனார் காரினை தனது சகோதரரோடு இணைந்து சுமார் ரூ.2.5 லட்சம் செலவு செய்து ஹெலிகாப்டர் போல் வடிவமைப்பினை மாற்றியுள்ளார். இந்நிலையில் இந்த சகோதரர்கள் செய்துள்ள இந்த பிரத்யேக ‘ஹெலிகாப்டர் கார்’ குறித்த செய்திகள் இணையத்தில் செய்திகளாகவும், வீடியோ பதிவுகளாகவும் பெருமளவில் பரவியுள்ளது.

இந்த வீடியோக்களை கண்டு பலரும் இந்த சகோதரர்களுக்கு தங்களது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். இந்த காரை திருமணம் போன்ற விழாக்களுக்கு வாடகைக்கு விடும் நோக்கில் இந்த சகோதரர்கள் ஹெலிகாப்டர் போல் தங்கள் காரினை வடிவமைத்ததாக தெரிகிறது. இதற்கிடையே, இந்த காருக்கு பெயிண்ட் அடிப்பதற்காக ஈஸ்வர் தீன் இதனை சாலையில் ஓட்டி சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது. அப்போது அக்பர்பூர் கோட்வாலி பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த நிலையில், இந்த ஹெலிகாப்டர் வடிவிலான காரினை கண்டு சற்று அதிர்ந்துள்ளனர். பின்னர் அந்த காரினை நிறுத்தி அதில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்ந்து, அவர்கள் விதிகளை மீறி காரில் இது போன்ற மாற்றங்களை செய்துள்ளதாக கூறி ரூ.2000 அபராதம் விதித்ததோடு, அந்த ஹெலிகாப்டர் காரினையும் பறிமுதல் செய்துள்ளனர். இதனால் அந்த காரின் உரிமையாளர்கள் மிகுந்த அதிர்ச்சி மற்றும் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். வித்தியாச வடிவிலான ‘ஹெலிகாப்டர் கார்’ பறிமுதல் செய்யப்பட்டாலும் அதனை அவ்வாறு வடிவமைப்பு செய்த சகோதரர்களுக்கு அப்பகுதி மக்கள் தங்களது பாராட்டுக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleகாவேரி மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்ற ரஜினிகாந்த் – தேர்தல் நேரம் குறித்து சுவாரஸ்ய பேச்சு!!
Next articleதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!